ஆடை சினிமா விமர்சனம்

ஆடை சினிமா விமர்சனம்

Cast:    Amala Paul
Ananya Ramaprasad
Ramya Subramanian
Director: Rathna Kumar
Music Director:    Pradeep Kumar
Oorka (band)
Cinematography:    Vijay Karthik Kannan
Editor: Shafique Mohammed Ali

அமலா பால் டீவி நிறுவனத்தில் வேலை செய்யும் மாடர்ன் பெண். தன் குழுவுடன் ஃபிராங்க் விடியோ செய்து வருகிறார். தன்னிடம் பெட் கட்டினால் என்ன வேண்டுமானாலும் செய்யும் கேரக்டர். நிறுவனம் காலி செய்த கட்டடத்தில் தன் நண்பர்களுடன் தண்ணியடிக்கும்போது நிர்வாணாமாக நாள் முழுதும் கட்டிடத்திற்குள் இருப்பதாக பெட் கட்டுகிறார். போதையில் மறுநாள் முழு நிர்வாணமாக எழும் அவர் எப்படி கட்டிடத்திற்குள் இருந்து வெளி வருகிறார் என்பது தான் கதை.

ஆதார கதை ஒரு வரியில் இருக்க, அதை நுண்ணிய புதிய வகை திரைக்கதையில் எடுத்துச் சொல்லியிருக்கிறார்கள். எதையும் சீரியஸாக எடுத்துக்கொள்ளாத இளம் தலைமுறையின் வாழ்க்கை  இப்படத்தின் ஈர்ப்பு அமாலா பாலின் நிர்வாணம் தான் ஆனால் அந்தக்காட்சிகள் எந்த ஆபாசமும் இல்லாமல் படபடப்பு வரும்படி படமாக்கப்பட்டிருக்கிறது.  அமாலா பால் இந்தியாவில் எந்த ஹிரோயினும் செய்ய முடியாத பாத்திரத்தை அனாயசமாக முடித்திருக்கிறார். படம் முடியும் போது அவர் மீதான பார்வையும், மரியாதையும் கூடும். நிர்வாணமாக உடலை மறைக்க அவர் படும் பாடு நமக்குள் கலகத்தை உண்டு பண்ணுகிறது. நடிப்பில் தன் அடுத்த கட்டத்தை அடைந்திருக்கிறார் என்றே சொல்லலாம்.   கொஞ்சமும் ஆபாசமில்லாமல் அத்தனை அழ்காய் படம்பிடிதிருக்கிறாரகள் இந்தப்படத்தின் தொழில்நுட்ப குழு.