இயக்குனர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்

இயக்குனர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்
இயக்குனர் அட்லீ மீது துணை நடிகை பரபரப்பு புகார்

அட்லீ இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'தளபதி 63' திரைப்படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடைபெற்று வருகிறது, இந்நிலையில் துணை நடிகை ஒருவர் இயக்குனர் அட்லீ மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

அந்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: "ஈவிபி ஃபிலிம் சிட்டியில் நடைபெற்று வரும் அட்லீயின் திரைப்படத்தில் வேலை பார்க்க வந்தேன். நான் வேலை பார்த்துக் கொண்டிருக்கும் போது அட்லீயும் அவரது உதவியாளர்களும் என்னை தகாத வார்த்தைகள் பேசி வேலை பார்க்க விடாமல் வெளியே அனுப்பி விட்டார்கள். எனவே அட்லீ மற்றும் அவரது உதவியாளர்களை விசாரித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறப்பட்டுள்ளது.