பத்திரிகைகள் பாராட்டும் *’அஞ்சாமை’ இயக்குனருக்கு நடிகர் ரஹ்மான் பாராட்டு !

ரஹ்மான், விதார்த் மற்றும் வாணி போஜன் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி விமர்சகர்களின் பாராட்டுக்களை வாரி குவித்து வரும் படம் 'அஞ்சாமை’.
நீட் தேர்வினாலும், தேர்வின் போது மாணவ மாணவிகள் அனுபவித்த தாங்கமுடியாத மன உளச்சலையும், அதனால் அவர்களது குடும்பத்தார் நேரிடும் துயரங்களை மைய்யப் படுத்தி இப்படத்தை இயக்கி உள்ளார் புது முக இயக்குனர் S.P. சுப்பு ராமன். இவர்  பிரபல இயக்குனர்களான N. லிங்குசாமி , மோகன் ராஜா ஆகியோரது ஹிட் படங்களுக்கு உதவியாளராக பணியாற்றிய அனுபவசாலி. 

'அஞ்சாமை'  படத்தில் மாணிக்கம் பெயரில்  இன்ஸ்பெக்டராகவும், வக்கீலாகவும் தன் இயல்பான நடிப்பால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ள ரஹ்மானுக்கு  பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.  தற்போது கேரளாவில் ஓமர் லூலு இயக்கத்தில் 'பேட் பாய்ஸ்' (Bad Boyz) படத்தின் பட பிடிப்பில் பிஸியாக உள்ள ரஹ்மான், இந்த பாராட்டுகள் எல்லாம் இயக்குனரையே சாரும் என்று அவரது சமூக வலை தளத்தில் பதிவிட்டுள்ளார் . 

மேலும் அவர் அவர், 

‘அஞ்சாமை’ படத்தின் கதையை கேட்ட நாளிலேயே அது என் மனதுக்கு மிகவும் நெருக்கமாகி விட்டது. படத்துக்கும் எனக்கும் பாராட்டுக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி.  இந்த பாராட்டுகள் அனைத்தும் இயக்குனர் எஸ்.பி. சுப்பு ராமனையே சாறும். இப்படி விவாதம் நிறைந்த சர்ச்சைக்குரிய ஒரு கதை தேர்வு செய்து படமாக்கிய அவரது துணிச்சலுக்கும், தைரியத்துக்கும் என் பாராட்டுக்கள். இப்படி அருமையான ஒரு கதையில் நான் நடித்ததில் எனக்கு  மகிழ்ச்சி.."

“அஞ்சமை” - திருசித்திரம் பட நிறுவனம் சார்பில்  பிரபல மன நல மருத்துவர் Dr. M. திருநாவுக்கரசு தயாரித்துள்ளார்.

உலகமெங்கும் டிரீம் வாரியர் பிக்சர்ஸ் வெளியீடு.