“செங்களம்” இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு !!!
“செங்களம்” இணையத்தொடரின் வெற்றியை அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களில் கொண்டாடிய படக்குழு !!!
துப்புறவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி “செங்களம்” இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடிய படக்குழு !!!
ZEE5 தளம் வழங்க, Abi & Abi Entertainment PVT LTD சார்பில் அபினேஷ் இளங்கோவன் தயாரிப்பில், இயக்குநர் எஸ் ஆர் பிரபாகரன் இயக்கத்தில், கலையரசன், வாணிபோஜன் முக்கிய பாத்திரத்தில் நடித்து, ZEE5 தளத்தில் சமீபத்தில் வெளியான “செங்களம்” இணையத் தொடர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்று வெற்றி பெற்றுள்ளது. இத்தொடருக்கு கிடைத்து வரும் மாபெரும் வரவேற்பை படக்குழுவினர் வித்தியாசமான வகையில் கொண்டாடியுள்ளனர்.
“செங்களம்” அரசியல் சம்பந்தமான தொடர் என்பதால், தமிழக அரசியல் ஆளுமைகளின் நினைவிடங்களுக்கு சென்று, மாலையிட்டு மரியாதை செய்ததுடன், துப்புறவு பணியாளர்களுக்கு வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி இந்த இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடியுள்ளது படக்குழு.
தமிழின் முதல் அரசியல் சம்பந்தமான முழு நீள இணையத்தொடராக வெளியாகியுள்ள செங்களம், அரசியலின் கோர முகத்தையும், அரசியல்வாதிகளின் மறுபக்கத்தையும் படம்ப்பிடித்துக் காட்டியுள்ளது. இதுவரையிலான திரை வரலாற்றில் அரசியல்களம் எப்படி இருக்கும் அரசியலுக்குள் பதவிக்காக நிகழும் போட்டி, பொறாமை, துரோகம் என ஒரு முழு நீள அரசியல் களத்தை நெருக்கமாக அணுகிய வகையில் மிக முக்கிய படைப்பாக மாறியிருக்கிறது “செங்களம்”.
விமர்சகர்கள் மற்றும் ரசிர்களிடம் ஒரு சேர வரவேற்பை குவித்துள்ள இத்தொடர், வெளியானதிலிருந்தே, ZEE5 தளத்தில் பெரும் எண்ணிக்கையிலான பார்வைகளை குவித்து வெற்றி பெற்றுள்ளது.
“செங்களம்” தொடருக்கு கிடைத்துள்ள மாபெரும் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் எஸ்.ஆர்.பிரபாகரன், ஒளிப்பதிவாளர் வெற்றிவேல் மகேந்திரன், நடிகை ஷாலி நிவேகாஸ் மற்றும் நடிகர் டேனியல் முதலான படக்குழுவினர் இன்று பேரறிஞர் அண்ணா நினைவிடம், கலைஞர் கருணாநிதி நினைவிடம், புரட்சித்தலைவர் எம் ஜி ஆர் நினைவிடம், புரட்சித்தலைவி ஜெயலலிதா நினைவிடம் மற்றும் இறுதியாக காமராஜர் நினைவிடத்திற்கு சென்று, மலர் தூவி மரியாதை செய்தனர். பின்னர் துப்புறவு பணியாளர்களுக்கு ஒரு மாதத்திற்கான வீட்டு உபயோக பொருட்கள் வழங்கி, இணையத்தொடரின் வெற்றியை கொண்டாடினர்.
மாறுபட்ட அரசியல்களத்தில், பரபரப்பான “செங்களம்” இணையத் தொடரை ZEE5 தளத்தில் கண்டுகளிக்கலாம்.
நடிகர்கள் :
நடிப்பு: வாணி போஜன், கலையரசன், ஷரத் லோஹிஸ்டாஷ்வா, விஜி பைரவி சந்திரசேகர், ஷாலி நிவேகாஸ், மானஷா ராதாகிருஷ்ணன், வேலா ராமமூர்த்தி, பக்ஸ், முத்துக்குமார், டேனியல் அன்னி போப், அர்ஜய், பவன், பிரேம், கஜராஜ், பூஜா வைத்தியநாதன்.
தொழில் நுட்ப குழு
இயக்கம் மற்றும் திரைக்கதை: எஸ்.ஆர்.பிரபாகரன்
தயாரிப்பு: அபினேஷ் இளங்கோவன் (Abi & Abi Entertainment PVT LTD)
தயாரிப்பு நிறுவனம்: Capture Can Pictures
இசை: தரண்
எடிட்டிங்: பிஜு. V. டான் போஸ்கோ
ஒளிப்பதிவு: வெற்றிவேல் மகேந்திரன்.