’ஜே.பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஜே.பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ஜே.பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ஜே.பேபி’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஊர்வசிக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். கணவரைன் மரணத்திற்குப் பிறகு தனி ஒருவராக நின்று பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கிறார்.

மூத்த மகன் மாறனுக்கு திருமணம் நடக்கும் போது மணப்பெண் வீட்டை விட்டு ஓடிபோகிறார். அந்த பெண்ணின் குடும்பத்தில் இருந்து இன்னொரு பெண்ணை இளையமகன் தினேஷ் திருமணம் செஞ்சிக்கிறார். இது மாறனுக்கு பிடிக்காமல் தினேஷை எதிரியாக பாவித்து வீட்டை விட்டு விரட்டிவிடுகிறார். 

இதனால், குடும்பத்தில் ஏற்பட்ட சச்சரவுகளால் ஊர்வசி மனநலம் பாதித்து, கொல்கத்தா சென்று விடுகிறார். 

சதா மோதலில் இருக்கும் அண்ணன், தம்பியான மாறன் மற்றும் தினேஷ் இருவரும் தாயைத் தேடி கொல்கத்தா புறப்படுகிறார்கள். அவர்களால் ஊர்வசியை கண்டுபிடிக்க முடிந்ததா? இருவரும் பகை மறந்து ஒன்று சேர்ந்தார்களா? என்பதை நெகிழ்ச்சியாக சொல்வது தான் படத்தோட மீதிக்கதை.

ஊர்வசியை பொருத்தவரை பிள்ளைகளிடம் காட்டும் அன்பு, ஏழைகளிடம் காட்டும் இறக்கம், அதுக்காக மோதிரம் தரும் காட்சி எல்லாம் அதிகம். மொத்தத்தில் எல்லா உணர்ச்சிகளையும் அமர்க்களப்படுத்தி நடிச்சிருக்காங்க.

மாறனுக்கு பொருத்தவரை வழக்கமான வேடம் கிடையாது. இந்த படத்தில் அவருக்கு அழுத்தமான கேரக்டர் ரோல். அதையும் அவர் நல்லா ரிஜிஸ்டர் பண்ற மாதிரி நடிச்சிருக்கார்.

ராணுவ வீரராக மூர்த்தி குறிப்பிட்டு சொல்ற மாதிரி நடிச்சிருக்கார்.

இசையமை பொருத்தவரை டோனி பிரிட்டோ படம் முழுக்க ஜாலம் பண்ணியிருக்கார்.

ஒளிப்பதிவு செஞ்ச ஜெயந்த் சேதுமாதவன் சென்னைக்கும், கொல்கத்தாவுக்கும் நம்மை அழைச்சுனு போறார். 

எல்லாரும் பார்த்து ரசிக்கிற மாதிரி இயக்கிய இயக்குனர் சுரேஷ் மாரி பாராட்டப்பட வேண்டியவர்.