லேபில் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

லேபில் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்
லேபில் தமிழ் வெப் சீரிஸ் விமர்சனம்

வடசென்னையை மையப்படுத்திய லேபில் வெப்சீரிஸின் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியானது.

முதல் காட்சியிலேயே படத்தின் மையத்தை அழகாக டைட்டில் போடுவதற்கு முன்பாக இயக்குநர் சொல்லி விடுகிறார். விளையாடிக் கொண்டிருக்கும் சிறுவர்கள் திடீரென ஒருவரை ஸ்கெட்ச் போட்டு கொல்கின்றனர். அவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் எதுவும் தெரியாத சிறுவனையும் சேர்த்துக் கொண்டு போய் சிறுவர் சீர்த்திருத்த பள்ளியில் சேர்க்கின்றனர்.


கதையின் நாயகன் பிரபாகரன், சிறுவயதில் நண்பர்களுடன் கால்பந்து விளையாடிக்கொண்டிருக்கிறான். அப்போது அவனுடன் விளையாடிக்கொண்டிருந்த 4 பேர், ஒரு போலீசை கொலை செய்துவிடுகின்றனர். அதனை பார்த்து, பயந்த பிரபாகரன் அங்கிருந்து செல்லும் சமயத்தில் போலிஸ் இவனையும் இந்த கூட்டத்துடன் சேர்த்து பிடித்துவிடுகின்றனர்.

நீதிமன்றத்தில் விசாரணையின் போது பிரபாகரன் தனக்கும் இந்த சம்பவத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று கூறுகிறான். ஆனால் நீதிபதி இவன் வாலி நகர் என்பதால், அந்த நகரத்தின் மேல் உள்ள தவறான கண்ணோட்டத்தில் இவன் கூறுவதை ஏற்க மறுக்கிறார். அப்போது பிரபாகரன் வாலி நகர் மேல் இருக்கும் இந்த தவறான கண்ணோட்டத்தை மற்ற நினைக்கிறான், பிறகு அதற்காக பிரபாகரன் என்னவெல்லாம் செய்கிறான் என்பதே மீதி கதை…

இந்த கதையினை இயக்குனர் அருண்ராஜா காமராஜ் அவருக்கே உண்டான பாணியில் இயக்கியுள்ளார்.

இந்த வெப் சீரிஸ் டிஸ்னி + ஹாட்ஸ்டாரில் ஒளிபரப்பாகிக்கொண்டிருக்கிறது.