வரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் புதிய தலைமுறையில் "இப்படிக்கு காலம்" நிகழ்ச்சி

வரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள்  புதிய தலைமுறையில் "இப்படிக்கு காலம்" நிகழ்ச்சி

வரலாற்றின் பக்கங்களில் ஏராளமான நிகழ்வுகள் பதிந்து கிடக்கின்றன.  இன்றைய தலைமுறைகள் அறிந்துகொள்ளும்  ஒரு சில நிகழ்வுகள் புதியனவாக அவர்களுக்கு தோன்றலாம். ஆனால் அவற்றில் பெரும்பாலும் நேற்று நடந்த வரலாற்றின் தொடர்ச்சிதான் என்பதை வரலாற்றைத் திரும்பிப் பார்க்கும்போது அறியலாம்.  உலகப் போர்கள்,  உலகைத் திருப்பிப்போட்ட புரட்சிகள், தேசங்கள் உருவாதல், பேரிடர்கள்,  என்று பல முக்கியமான நிகழ்வுகளை திரும்பிப்பார்க்கும் வரலாற்று நிகழ்வுகளை இப்படிக்குக் காலம் என்ற தலைப்பில் தொகுத்து வழங்கப்பட்டது. முதலில் கொரானோவை மையமாக வைத்து உலகை உலுக்கிய தொற்றுநோய்கள் குறித்த நிகழ்வுகள் தொகுத்து வழங்கப்பட்டது. அதைப்போல மறக்கப்பட்ட மற்றும் மறைக்கப்பட்ட வரலாற்று நிகழ்வுகளை எடுத்துக்காட்டும் விதமாக புதிய பகுதி ஒளிபரப்பப்பட இருக்கிறது. இந்நிகழ்ச்சி நமது புதிய தலைமுறையில் சனி மற்றும் ஞாயிறு அன்று இரவு 9:30 மணிக்கு ஒளிபரப்பாகிறது.