’ரெபல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ரெபல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’ரெபல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’ரெபல்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

 

தென்னிந்தியாவை மொழிவாரி மாநிலங்களாக பிரிக்கப்பட்ட போது, மூணார் கேரளாவில் சேர்க்கப்பட்டது. ஆனால், அங்கிருந்த தமிழ் மக்கள் தங்களை தமிழகத்தோடு சேர்க்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டாலும், அவர்களுடைய விருப்பம் நிறைவேறவில்லை. அதே சமயம், அவர்களுக்கு அங்கு தமிழ் வழி கல்வி உள்ளிட்ட அனைத்து உரிமைகளும் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டாலும், அங்கிருக்கும் தமிழகர்கள் மொழி ரீதியாக அடக்குமுறைக்கு ஆளாகும் சம்பவங்கள் பல நடந்தது. அதில் ஒரு சம்பவத்தை பற்றி பேசுவது தான் ‘ரெபல்’ படத்தின் கதை.

 

மூணாறு தேயிலை தோட்டங்களில் கூலித்தொழிலாளியாக பணியாற்றுபவர்கள், தங்களைப் போல் தங்களது பிள்ளைகளும் இப்படி கஷ்ட்டப்படக் கூடாது, அதனால் அவர்களை படிக்க வைத்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அதன்படி, தேயிலைத் தோட்ட தொழிலாளியான சுப்பிரமணிய சிவாவின் மகன் ஜி.வி.பிரகாஷ் குமார் உள்ளிட்ட தமிழ் இளைஞர்கள் கல்லூரி படிப்பிற்காக பாலக்காட்டில் உள்ள அரசினர் கல்லூரியில் சேர்கிறார்கள். ஆனால், அங்கு அவர்களுக்கு சக மாணவர்களுக்கு கிடைக்க கூடிய அனைத்து வசதிகளும் மறுக்கப்படுவதோடு, ராக்கிங் என்ற பெயரில் பல அவமானங்களையும், அடக்குமுறைகளையும் சந்திக்கிறார்கள்.

 

மலையாள மாணவர்கள் அமைப்பினர் தமிழ் மாணவர்களை அடக்கி ஆளும் போக்கை கண்டு வெகுண்டெழும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் குமார் தலைமையில் தமிழ் மாணவர்கள் புரட்சியில் ஈடுபடுவதோடு, தமிழ் மாணவர்களுக்கான தனி அமைப்பை தொடங்கி தேர்தலில் போட்டியிருகிறார்கள். அவர்களுடைய இந்த முயற்சி தமிழ் மாணவர்களின் நிலையை மற்றியதா?, இல்லையா? என்பது தான் படத்தோட மீதிக்கதை.

 

ஜி.வி.பிரகாஷ் குமார் கதிரேசன் என்ற கதாபாத்திரத்தில் ஆக்ரோஷமான நடிப்பை அமர்க்களமாக வெளிப்படுத்தியிருக்கார். காதல் காட்சிகள் குறைவு என்றாலும் அதை நிறைவாக செய்திருப்பவர், தான் ஏற்ற வேடத்திற்கு நியாயம் சேர்க்கும் வகையில் நடித்திருக்கார்.

 

நாயகியாக நடிச்சு இருக்க மமீதா பைஜு, வெறும் காதல் காட்சிகளில் மட்டும் தலை காட்டாமல், திரைக்கதையோட்டத்திற்கான கதாபாத்திரமாகவும் வலம் வந்து கவர்கிறார்.

 

கருணாஸ், சுப்பிரமணிய சிவா, வெங்கிடேஷ், கல்லூரி வினோத், ஆதித்யா பாஸ்கர், சனுரஹீம் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் அனைவரும் கொடுத்த வேலையை குறையில்லாமல் செஞ்சிருக்காங்க.

 

ஜி.வி.பிரகாஷ் குமாரின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கு. 

 

அருண் ராதாகிருஷ்ணனின் ஒளிப்பதிவில் கதாபாத்திரங்களின் மன அழுத்தங்களை ரசிகர்களிடம் நேர்த்தியாக கடத்தியிருப்பதோடு, 80ம் காலக்கட்ட காட்சிகளை மிக சிறப்பாகவும் காட்சிப்படுத்தியிருக்கிறது.

 

உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எழுதி இயக்கியிருக்கும் அறிமுக இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், அழுத்தமான கதையை எதார்த்தமாக சொல்லியிருப்பதோடு, அனைத்து தரப்பினரையும் உணர்வுப்பூர்வமாக பாதிக்கப்படியும் காட்சிகளை கையாண்டிருக்கிறார்.

 

எப்படியாது படித்து வாழ்க்கையில் முன்னேறிவிட வேண்டும் என்று முயற்சிக்கும் முதல் தலைமுறை இளைஞர்களின் போராட்டம் மற்றும் மொழி ரீதியான அடக்குமுறை ஆகியவற்றை மிக நியாயமாக கையாண்டிருக்கும் இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ், அதை ஆக்‌ஷன் கமர்ஷியல் பார்முலாவில் கொடுத்து இந்த ‘ரெபல்’ அனைவருக்குமான படம் என்பதை நிரூபித்திருக்கார்.

 

முதல் படத்திலேயே சமூகம் சார்ந்த படத்தை எடுத்த இயக்குநர் நிகேஷ் ஆர்.எஸ்-க்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகள்.