எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன்

எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன்
எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன்

எஸ்.பி.பி. உடல் நல்லடக்கம் காவல்துறை மரியாதையுடன்

 

மறைந்த பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது.

கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல பின்னணிப் பாடகா் எஸ்.பி.பாலசுப்ரமணியம் (74) வெள்ளிக்கிழமை காலமானாா். இதயம் மற்றும் நுரையீரல் செயலிழப்பு காரணமாக அவரது உயிா் பிரிந்ததாக மருத்துவமனை நிா்வாகம் தெரிவித்தது

சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள அவருடைய இல்லத்திலும் தாமரைப்பாக்கம் பண்ணை வீட்டிலும் எஸ்.பி.பி.யின் உடலுக்கு மக்கள் ஏராளமாகத் திரண்டு கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்தினார்கள். 

எஸ்.பி.பாலசுப்ரமணியத்துக்கு திருவள்ளூா் அருகே தாமரைப்பாக்கம்-செங்குன்றம் சாலையில் 14 ஏக்கா் பண்ணை இல்லம் உள்ளது. இந்தப் பண்ணை இல்லம் அவருக்கு மிகவும் பிடித்த இடமாகும். இதன் காரணமாக மாதந்தோறும் அல்லது முக்கிய நாள்களில் எஸ்.பி.பி. இங்கு வந்து தங்கிச் செல்வதை வழக்கமாகக் கொண்டிருந்தாா்.

இந்தப் பண்ணை இல்லத்தில் எஸ்.பி.பி. உடலுக்கு இறுதிச்சடங்கு இன்று நடைபெற்றது. புரோகிதர்கள் மந்திரம் ஓத மகன் சரண் இறுதிச்சடங்குகள் செய்தார். இதையடுத்து எஸ்.பி.பி. உடல் காவல்துறை மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளது. 72 குண்டுகள் முழங்க காவல்துறையினர் மரியாதை செலுத்தினார்கள். 24 காவலர்கள் 3 முறை வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு மரியாதை செலுத்தினார்கள்.