’கடைசி உலகப் போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கடைசி உலகப் போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’கடைசி உலகப் போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கடைசி உலகப் போர்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

மூன்றாம் உலகப் போர் ஏற்பட்டால் எப்படி இருக்கும் என்ற கற்பனையையும், அப்படி போர் ஏற்பட்டால் அந்த போரே கடை உலகப் போராகவும் இருக்க வேண்டும், என்ற தனது மன ஓட்டத்தை கமர்ஷியல் ஹிப் ஹாப் ஆதி கொடுத்திருப்பது தான் ‘கடைசி உலகப் போர்’ படத்தின் கதை.

ஆயுத பயிற்சி பெற்றவராக நாயகன் ஹிப் ஹாப் ஆதி நடிச்சிருக்கார். காதலி கல்வி அமைச்சராக போகிறார் என்றதும், அவர் மூலம் சமூகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்று நினைக்கிறார். காதல் காட்சிகள் குறைவாக இருந்தாலும், சண்டைக்காட்சிகளில் கூடுதல் கவனம் செலுத்தி நடிச்சிருக்கார். 

நாயகியாக நடிச்ச அனகாவிற்கு குறைவான காட்சிகள் என்றாலும் நிறைவாக நடிச்சிருக்காங்க.

முதலமைச்சர் உதவியாளராக நடித்திருக்கும் நட்டி நட்ராஜ் தன்னை முதன்மையாக நிறுத்தி ஆட்சியாளர்களை ஆட்டுவிக்கும் வேலையை அமர்க்களமா செய்திருக்கார். ஹீரோவுக்கு இணையான வேடத்தில் அசத்தலாக நடிச்சிருக்கார்.

முனிஷ்காந்த், சிங்கம் புலி, ஹரிஷ் உத்தமன், கல்யாண், தலைவாசல் விஜய் எல்லோரும் பாத்திரத்தை உணர்ந்து நடிச்சிருக்காங்க.

ஒளிப்பதிவு செய்த அர்ஜுன் ராஜா படத்தை பிரமாண்டமாக காட்சிப்பத்தி இருக்கார்.  படத்தொகுப்பாளர் பிரதீப், சண்டைப்பயிற்சியாளர் மகேஷ் மேத்யூ பணியும் பாராட்டுக்குறியது.

எழுதி இயக்கி இசையமைத்து தயாரித்திருக்கும் ஹிப் ஹாப் ஆதி, வித்தியாசமான முயற்சியின் மூலம் மக்களிடம் ஒற்ருமையை ஏற்படுத்த முயற்சித்திருக்கார்.

இயக்குநராகவும், தயாரிப்பாளராகவும் ஹிப் ஹாப் ஆதி மேற்கொண்ட முயற்சியில் சில குறைகள் இருந்தாலும்,  அவரது தைரியமான மற்றும் வித்தியாசமான முயற்சி தமிழ் சினிமாவை அடுத்தக் கட்டத்திற்கு அழைத்துச் செல்லும் என்பது உறுதி.

தயாரிப்பாளராக அறிமுகமாகியிருக்கும் ஹிப் ஹாப் ஆதிக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.