’கோழிப்பண்ணை செல்லதுரை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’கோழிப்பண்ணை செல்லதுரை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
அண்ணன், தங்கை பாசம் தான் படத்தின் மையக்கரு.
கணவன், மனைவிக்கு இடையில் ஏற்படும் பிரச்சனையால் சிறுவயதில் நாயகன் ஏகனும், அவரது தங்கையும் கைவிடப் படுகிறார்கள். ஆதரவு அளித்த பாட்டியும் இறந்து விட, கோழிப்பண்ணை நடத்தும் யோகி பாபு அவர்களுக்கு அடைக்கலம் கொடுக்கிறார்.
பெற்றோர் இல்லாத குறை தெரியாமல் தங்கையை வளர்க்க நினைக்கும் ஏகனின் வாழ்க்கையில் புது புது உறவுகள் வருகிறார்கள். அவர்கள் மூலம் அவர் நினைத்தது நடந்ததா?, பிள்ளைகலை விட்டு சென்ற பெற்றோர் என்ன ஆனார்கள்? என்பதை உணர்வுப்பூர்வமாக சொல்வது தான் படத்தின் மீதிக்கதை.
நாயகனாக நடித்திருக்கும் ஏகன் புதுமுகம் என்பது தெரியாதவாறு நடிப்பில் அசத்தியிருக்கிறார். பாசம், காதல், சோகம்ன்னு எல்லா உணர்வுகளையும் அருமையா வெளிப்படுத்தி நடிச்சிருக்கார்.
நாயகியா நடிச்ச பிரகிடா சாகாவுக்கு சின்ன ரோல் தான் என்றாலும் நிறைவாக செஞ்சி இருக்காங்க.
யோகி பாபு காமெடி காட்சிகளை தவிர்த்து குணச்சித்திர பாத்திரத்திலும் தன்னால் நடிக்க முடியும் என்பதை நிரூபித்திருக்கிறார்.
நாயகனின் தங்கையாக நடிச்ச சத்யா தேவி, கதையின் மையம் என்பதை உணர்ந்து நடிச்சிருக்காங்க.
ஐஸ்வர்யா தத்தா, லியோ சிவக்குமார், நவின், குட்டிபுலி தினேஷ் எல்லோரும் கதாபாத்திரத்திற்கு ஏற்ப நடிச்சிருக்காங்க.
ஒளிப்பதிவு செய்த அசோக் ராஜா, கதை நடக்கும் கிராமத்திற்கு நம்மை அழைச்சிட்டு போறார்.
என்.ஆர்.ரகுநந்தன் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் வகையில் அமைச்சிருக்காங்க.
அண்ணன், தங்கை பாசத்தை மக்கள் மனதுக்கு நெருக்கமாக சொல்லியிருந்தாலும், இயக்குநர் சீனு ராமசாமி திரைக்கதையில் இன்னும் கவனம் செலுத்தியிருக்கலாம்.
சிறு சிறு குறைகள் இருந்தாலும், உறவுகளின் உண்ணதத்தையும், மக்களின் மனபோராட்டங்களையும் அழகிய பயணத்தின் மூலம் சொல்லிய இயக்குநர் சீனு ராமசாமிக்கு, சென்னை பத்திரிகாவின் வாழ்த்துகளும், பராட்டுகளும்.