’லப்பர் பந்து’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’லப்பர் பந்து’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
ஹரிஷ் கல்யாண் சின்ன வயதிலிருந்தே கிரிக்கெட் மீது அதீத மோகம் கொண்டவராக இருப்பதோடு பல அணிகளில் கிரிக்கெட் விளையாடி வருகிறார். அப்போது ஒரு போட்டியில் எதிர் அணியில் அட்ட கத்தி தினேஷ் பேட்டிங்கில் அசத்துகிறார். இதுக்கு நடுவில் ஹரிஷ் கல்யாண், அட்ட கத்தி தினேஷின் மகளை காதலிக்கிறார். அப்போது தினேஷுக்கும், ஹரிஷ் கல்யாணுக்கும் தகராறு ஏற்பட்டு அடிதடியில் இறங்குகிறார்கள்.
இவர்களுக்கு இடையே ஏற்பட்ட இந்த மோதல், இவர்களது வாழ்க்கையிலும் பிரச்சனையை ஏற்படுத்த, ஹரிஷ் கல்யாண் காதலுக்கும் பிரச்சனையாக முடிகிறது. இவர்கள் இரண்டு பேரும் சமரசம் ஆனார்களா?, ஹரிஷ் கல்யாண் காதல் நிறைவேறியதா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.
ஹரிஷ் கல்யாண் இளையான தோற்றம், இயல்பான நடிப்பு என்று கதாபாத்திரத்திற்கு பொருத்தமாக இருப்பதோடு, தனது நடிப்பு மூலம் கதாபாத்திரத்தை மெருகேற்றவும் செய்திருக்கிறார். காதல் மற்றும் கிரிக்கெட் இரண்டிலும் தீவிரமாக இருக்கும் ஹரிஷ் கல்யாண், தனது காதலியின் தந்தை தான் தினேஷ் என்று தெரிந்ததும் திணறுவது, அவரிடம் மன்னிப்பு கேட்க துடிப்பது என்று நடிப்பில் பூந்து விளையாடி இருக்கார்.
அட்ட கத்தி தினேஷ் வயது முதிர்ந்தவராக நடிப்பில் நல்ல முதிர்ச்சி தெரியுது. மனைவியிடம் அடங்கி போவது, மகள் மீது பாசம்ன்னு ஹரிஷ் கல்யாணுக்கு சமமாக நடிப்பில் கொடிகட்டி பறந்திருக்கார்.
சுவாசிகா, சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி இருவருக்கும் வலுவான கதாபாத்திரம். அவர்கள் ரெண்டு பேரும் நடிப்பில் நிறிஅவா நடிச்சிருக்காங்க.
பாலசரவணன் நகைச்சுவை காட்சிகள் சிரிக்கும்படி இருக்கிறது. கீதா கைலாசம், காளி வெங்கட், திவாகர், டி.எஸ்.கே என மற்ற கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர்களின் நடிப்பில் தாழ்வில்லை.
தினேஷ் புருஷோத்தமனின் கேமரா கிரிக்கெட் விளையாட்டை மட்டும் இன்றி நடிகர்களின் இயல்பான நடிப்பையும் நேர்த்தியாக காட்சிப்படுத்தியிருக்கிறது.
ஷான் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் படத்துக்கு மிகப்பெரிய பலமாக பயணித்திருக்கிறது.
எல்லாருக்கும் கிரிக்கெட் விளையாட்டு பிடிக்கும் தான். ஆனால், கிரிக்கெட் விளையாட்டு காட்சிகள் சில திரும்ப திரும்ப வருவதை எடிட்டர் கொஞ்சம் க்ஜுறைச்சிருந்தா படம் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும்.
விளையாட்டு பின்னணியில் சாதி, காதல்னு சேர்த்து ஒரு முழுமையான கமர்ஷியல் படத்தை கொடுத்திருக்கும் இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து, படத்தின் துவக்கம் முதல் முடிவு வரை ரசிகர்களை எண்டர்டெயின் செய்திருக்கிறார்.
சென்னை பத்திரிகா சார்பில் அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து அவர்களுக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.