’நந்தன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’நந்தன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’நந்தன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’நந்தன்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

ஊராட்சி மன்றங்களில் நடக்கும் சாதி பாகுபாடு மற்றும் ஆதிக்குடி ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு நேர்ந்த சில கசப்பான உண்மைகளை சொல்வது தான் ‘நந்தன்’ படத்தின் மையக்கரு.

கூல்பானை என்கிற அம்பேத்குமார் என்ற அழுக்கு படிந்த உழைப்பாளியாக வாழ்ந்திருக்கும் சசிகுமார், ஊராட்சி மன்ற தலைவரான பிறகு அந்த பணியை திறம்பட செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் செல்லும் போது அவருக்கு நேரும் சோகம் மனதை பதற வைக்கிறது.

சசிகுமாரை பொருத்தவரை தனது வழக்கமான பாணியில் இல்லாமல் புது அவதாரம் எடுத்து அழுத்தம் திருத்தமான கதாபாத்திரம் ஏற்று நடித்து பாராட்டு பெறுகிறார்.

நாயகியாக நடிச்ச ஸ்ருதி பெரியசாமி, கதாபாத்திரத்தை உணர்ந்து அருமையா நடிச்சிருக்காங்க. 

பாலாஜி சக்திவேல் சாதி வெறியாட்டத்தின் வக்கிரத்தை தனது நடிப்பு மூலம் நம் கண் முன் நிறுத்துகிறார். ரியல் எஸ்டேட் அதிபராக நடித்திருக்கும் துரை சுதாகர், பாலாஜி சக்திவேலுக்கு இணையாக நடிச்சிருக்கார்.

சமுத்திரக்கனி, ஸ்டாலின், வி.ஞானவேலு, ஜி.எம்.குமார், சக்தி சரவணன் எல்லோரும் கதாபாத்திரத்தை உணர்ந்து நடிச்சிருக்காங்க. 

ஒளிப்பதிவாளர் ஆர்.வி.சரவணன் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை தத்ரூபமாக படமாக்கியிருக்கார்.

ஜிப்ரானில் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

படத்தை இயக்கிய இயக்குநர் இரா.சரவணன், சொல்லப்பட வேண்டிய விசயத்தை சொல்லியிருந்தாலும், அதை இன்னும்  கொஞ்சம் அழுத்தமாக சொல்லியிருக்கலாம்.

சமூகத்தில் ஆதிக்குடிகளின் அவல நிலையை கலையை அரசு ஏற்படுத்திய தனி தொகுதி மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தாலும் அவர்களின் நிலை மாறுவது என்பது கேள்விக்குறி தான் என்பதை அழுத்தம் திருத்தமாக சொல்லியிருக்கும் இயகுக்குநர் இரா.சரவணன் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.