’சிங்கப்பெண்ணே’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’சிங்கப்பெண்ணே’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி
’சிங்கப்பெண்ணே’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’சிங்கப்பெண்ணே’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

ஜெ.எஸ்.பி பிலிம் ஸ்டுடியோ சார்பில் ஜெ.எஸ்.பி.சதீஷ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘சிங்கப்பெண்ணே’. Swimming Cycling Running ஆகிய மூன்று போட்டிகளிலும் ஒரே நேரத்தில் பங்கேற்கும் Triathlon என்ற விளையாட்டை மையப்படுத்தி உருவாகியுள்ள இபப்டத்தில், Triathlon போட்டியில் பல முறை தேசிய அளவில் வெற்றி பெற்றிருக்கும் தமிழக வீராங்கனை ஆர்த்தி கதையின் நாயகியாக நடித்திருக்கிறார். ஆர்த்தியின் பயிர்சியாளர் வேடத்தில் ஷில்பா மஞ்சுநாத் நடித்திருக்கிறார்.

சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கும் இந்த படம் எப்படி இருக்குணு பார்ப்போம்.

தென்காசியை சேர்ந்த ஷில்பா ஷெட்டி நீச்சல் விளையாட்டில் சாதிக்க வேண்டும் என்று இருக்கிறார். ஆனால், அவருடைய கனவை அவருடைய தந்தை சிதைத்துவிடுகிறார். தன்னால் முடியாததை மற்றவர்கள் செய்ய வேண்டும் என்பதற்காக நீச்சல் பயிற்சியாளராக பணியாற்றி வருகிறார். அவரது ஊரை சேர்ந்த ஆர்த்தி நீச்சல், சைக்கிள் ஓட்டுவது மற்றும் ஓடுவது என்று அனைத்திலும் திறமை படைத்தவராக இருக்கிறார். ஆனால், அவருடைய திறமைப்பற்றி அவரே தெரிந்துக்கொள்ளாமல் கிராமத்தில் இருப்பதை பார்க்கும் ஷில்பா ஷெட்டி அவரை சென்னைக்கு அழைத்துச் சென்று முறையான பயிற்சி அளித்து அவரை சிறந்த Triathlon வீராங்கனையாக உருவாக்க நினைக்கிறார்.

அதன்படி தான் பயிர்சியாளராக பணியாற்றும் மையத்தில் ஆர்த்திக்கு ஷில்பா ஷெட்டி பயிற்சியளிக்கிறார். ஆரம்பத்தில் புதிய சுழலால் தடுமாறும் ஆர்த்தி, நாட்கள் செல்ல செல்ல, சிறந்த வீராங்கனையாக உருவெடுக்கிறார். இதற்கிடையே ஆர்த்தியின் திறமையை பார்த்து வியக்கும், ஐஏஎஸ் அதிகாரி பிரேம், ஆர்த்தியால் தனது மகள் தோல்வியடைந்து விடுவாளோ என்று பயந்து, ஆர்த்தியை போட்டியில் பங்கேற்க விடாமல் செய்கிறார். இதனை எதிர்த்து கேட்கும் ஷில்பா மஞ்சுநாத்தையும் சதி திட்டத்தால் சஸ்பெண்ட் செய்ய வைத்துவிடுகிறார்கள்.

எத்தனை தடைகள் வந்தாலும், போராடுவோம் என்று வேறு ஒரு தளத்தில் ஆர்த்திக்கு ஷில்பா மஞ்சுநாத் பயிற்சியளிக்கும் போது அவர் விபத்தில் சிக்கிவிட, அதில் இருந்து ஆர்த்தி மீண்டு வந்தாரா?, ஷில்பா நினைத்தது போல் Triathlon போட்டியில் அவர் வெற்றி பெற்றாரா? இல்லையா? என்பது தான் படத்தின் மீதிக்கதை.

கதையின் நாயகியாக நடித்திருக்கும் Triathlon சாம்பியன் ஆர்த்திக்கு விளையாட்டு புதிதல்ல என்றாலும் நடிப்பு இது தான் முதல் அனுபவம். ஆனால், புதியவர் என்று தெரியாத வகையில் சிறப்பாக நடித்திருக்கிறார். 

ஆர்த்தியின் பயிற்சியாளராக நடித்திருக்கும் ஷில்பா மஞ்சுநாத், பயிற்சியாளர் வேடத்திற்கு ஏற்றபடி பிட்டாக இருக்கிறார். நீச்சல் பயிர்சியாளர் வேடத்திற்கு நூறு சதவீதம் நியாயம் சேர்த்திருக்கும் அவர், கொடுத்த வேலையை குறையில்லாமல் செய்திருக்கிறார்.

ஐ.ஏ.எஸ் அதிகாரி வேடத்தில் நடித்திருக்கும் பிரேம், பயிற்சியாளர் வேடத்தில் நடித்திருக்கும் தீபக் நம்பியார், பசங்க சிவகுமார், ஷில்பா மனுசுநாத்தின் தந்தையாக நடித்திருக்கும் ஏ.வெங்கட்கேஷ், ஆர்த்தியின் முறை மாமனாக நடித்திருக்கும் செண்ட்ராயன் என அனைவரும் கதாபாத்திரத்திரங்களுக்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் என்.கே.ஏகாம்பரம் தனது கேமரா மூலம் காட்சிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார். க்ளைமாக்ஸ் காட்சியில் இடம்பெறும் தேசிய அளவிலான Triathlon போட்டியை காட்சிப்படுத்திய விதம் வியக்க வைக்கிறது. நிஜமாக நடந்த ஒரு போட்டியை மிக எதார்த்தமாக காட்சிப்படுத்தி அசத்தியிருக்கிறார்.

இசையமைப்பாளர் குமரன் சிவமணியின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை விளையாட்டு போட்டிகளில் இருக்கும் பரபரப்பை குறையவிடாமல் பயணித்திருக்கிறது.

தயாரிப்பாளராகவும், இயக்குநராகவும் ஜெ.எஸ்.பி.சதீஷ் ஒரு சிறந்த படத்தை கொடுத்திருக்கிறார். விளையாட்டு போட்டியை மையப்படுத்திய திரைப்படம் என்றாலும், பெண்களுக்கு உத்வேகமும், ஊக்கமும் அளிக்கும் ஒரு சிறப்பான கதையை மிக நேர்த்தியாக சொல்லியிருக்கிறார்.

இந்த படத்தை பார்க்கும் பெற்றோர்கள் அனைவரும் தங்கள் பிள்ளைகளையும் விளையாட்டில் ஈடுபடுத்த வேண்டும் என்று நினைப்பார்கள், அந்த அளவுக்கு இந்த படத்தின் உருவாக்கம் அமைந்துள்ளது.

உண்மையான விளையாட்டு வீராங்கனையை நடிகையாக்கி அவர் மூலம், குடும்பமாக பார்க்க வேண்டிய சிறந்த திரைப்படத்தை கொடுத்திருக்கும் இயக்குநரும், தயாரிப்பாளருமான ஜெ.எஸ்.பி.சதீஷுக்கு சென்னை பத்திரிக்கா சார்பில் வாழ்த்துகளும், பாராட்டுக்களும்