ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!
ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!
ஒரு குரலாய் இசை நிகழ்ச்சிக்குக் குரல் கொடுத்த ரஜினிகாந்த்!

பல்வேறு இசைக்கலைஞர்கள் இணைந்து பங்கேற்கும்"ஒரு குரலாய்"இசை நிகழச்சி இன்று மாலை 6 மணி (6 PM IST) அளவில் -செப்டம்பர் 12-அன்று ஒளிபரப்பாக இருக்கிறது.மகத்தான இந்த நிகழ்ச்சியில் ஏற்கனவே உலகநாயகன் கமல்ஹாசன்,இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் போன்றவர்களுடன் வாழ்த்துத் தெரிவித்து இணைந்திருக்கிறார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவருடைய வானொலியும் நிகழ்ச்சியில் ஒளிபரப்பாகும் என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம். வலைத்தளத்தில் இன்று வெளியாகும் நிகழ்ச்சியை கீழே குறிப்பிட்டுள்ள முகநூலில் பக்கங்களில் எந்தக் கட்டணமும் இன்றி உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்கள் ரசிக்கலாம்.

யு. ஸ்.சி.டி - https://www.facebook.com/usctofficial

அனிருத் ரவிசந்தர் - https://www.facebook.com/AnirudhOfficial

டி. இமான் - https://www.facebook.com/ImmanOfficial

ஜி. வி.பிரகாஷ் குமார் - https://www.facebook.com/G.V.Prakash 

சில்வர் ட்ரீ நிறுவனம் ஒருங்கிணைத்து வழங்கும் இந்த இசை நிகழ்ச்சி மூலம் திரட்டப்படும் நிதி பாதிக்கப்பட்ட இசைக்கலைஞர்களின் நலனுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.

இந்த இசை நிகழ்ச்சியை இசைஞானி இளையராஜா மற்றும் திரு. கே.ஜெ. யேசுதாஸ் அவர்களும் வெகுவாக பாராட்டி தங்களது வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.

இந்நிகழ்ச்சியில் திரு .ஷங்கர் மகாதேவன், திரு.ஹரிஹரன், திருமதி.கே.எஸ். சித்ரா, திருமதி. ஸ்ரேயா கோஷல், போன்ற அற்புதமான பாடகர்களுடன் தமிழ் இசைத்துறையின் முன்னணி இசையப்பாளர்களான திரு.அனிருத் ரவிசந்தர், திரு. ஜி. வி. பிரகாஷ் குமார், திரு. டி.இமான், திரு. ஷான் ரோல்டன், திரு.லியோன் ஜேம்ஸ் மற்றும் விவேக் - மெர்வின் போன்ற கூட்டணியும் ஒன்றாக இணைகிறது!

யு. ஸ்.சி.டி -ன் ஒரு குரலாய் நிகழ்ச்சியை மேலும் ஊக்குவிக்கும் விதமாக நாற்பது பாடகர்கள் ஒன்றாக இணைந்து பாடிய ஒரு குரலாய் கீதம் செப்டெம்பர் 10-ஆம் தேதி வெளியானது. இப்பாடலை பாடகர் திரு. ஸ்ரீனிவாஸ் இசையமைத்துள்ளார் மற்றும் பாடல் வரிகளை கவிஞர் திரு. மதன் கார்க்கி எழுதியுள்ளார். டிரெண்ட் மியூசிக் (Trend Music) பாடலை வெளியிட்டுள்ளது.