பிரபல இயக்குனர் மகேந்திரன் காலமானார்

பிரபல இயக்குனர் மகேந்திரன் காலமானார்

முள்ளும் மலரும், ஜானி, உதிரிப்பூக்கள் போன்ற படங்களை இயக்கியவர் மகேந்திரன் (79), சிறுநீரக கோளாறு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். கடந்த சில நாட்களாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த மகேந்திரன், சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

மகேந்திரனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.