’வடக்குப்பட்டி’ விமர்சனம்

’வடக்குப்பட்டி’ விமர்சனம்
’வடக்குப்பட்டி’ விமர்சனம்

’வடக்குப்பட்டி’ விமர்சனம்

சாமி இல்லன்னு சொல்ற சந்தானத்திற்கு அந்த சாமியை வச்சே சம்பாதிக்குற வாய்ப்பு வருது. அதை சரியாக பயன்படுத்தி தனது சொந்த நிலத்தில் ஒரு கோவில் கட்டி, அதன் மூலம் சம்பாதிச்சிட்டு வர்ரார். அந்த ஊர் மக்களும், அந்த கோவில் மீதும், சாமி மீதும் பக்தியோடும், நம்பிக்கையோடும் இருக்குறாங்க. இதுக்கு நடுவில், சந்தானத்தின் பேராசையால் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக அரசு அந்த கோவிலுக்கு சீல் வச்சிட, சந்தானம் சம்பாத்தியத்திற்காக அரசிடம் இருக்கும் கோவில் நிர்வாகத்தை எப்படியாவது கைப்பற்ற வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபடுகிறார். கடைசியில் ஜெயித்தது, மக்களின் பக்தியா? அல்லது சந்தானத்தின் புத்தியா? என்பதை முழுக்க முழுக்க நகைச்சுவையாக சொல்வது தான் ‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் கதை.

சந்தானம் ஒரு நாயகனாக நடித்தாலும், நகைச்சுவையாக நடித்தால் மட்டுமே அவரை மக்கள் ஏற்றுக்கொள்வார்கள் என்பது இந்த படத்திலும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கதாநாயகனாக நடித்தாலும், மற்ற கதாபாத்திரங்களுக்கு சரிசமான வாய்ப்பை கொடுத்து, படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் ரசிகர்களை சிரிக்க வைத்திருக்கிறார் சந்தானம்.

சந்தானத்துக்கு சமமாக மாறனும், சேசுவும் புகுந்து விளையாட்றாங்க. சந்தானம் மற்றும் மாறன் கூட்டணி என்றாலே சிரிப்பு சரவெடி தான். இது போதாதுன்னு,சேசுவும் சேர்ந்து மக்களை சிரிக்க வைக்கிறார். அதிலும் சேவின் பரதநாட்டியம் சிரிக்க தெரியாதவர்களையும் சிரிக்க வைப்பது உறுதி.

எம்.எஸ்.பாஸ்கர் ஒரு தனி ரகம். தன்னுடைய அனுபவ நடிப்பை அப்படியே கொடுத்து நடிச்சிருக்கார். இதில் கொஞ்சம் கூட விட்டுவைக்கல. நிழல்கள் ரவி, அவருக்கு இணையாக நடிச்சிருக்காரு. ஜான் விஜய், ரவி மரியா, நான் கடவுள் ராஜேந்திரன், இட்ஸ் பிரசாந்த், ஜாக்குலின் இவங்க எல்லோரும் படத்துக்கு கூடுதல் பலம் சேர்த்திருக்காங்க. கூல் சுரேஷுக்கு வலுவான ரோல். எந்த அளவுக்கு நடிக்க முடியுமோ அந்த அளவுக்கு நடிச்சு மக்களை சிரிக்க வைக்கிறார். தாசிதார் வேடத்தில் வில்லனாக நடித்திருக்கும் தமிழ், வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் சிரிக்கவும் வைக்கிறார். நாயகியாக நடித்திருக்கும் மேஹா ஆகாஷ், திரைக்கதையின் ஓட்டத்திற்கு பயன்பட்டிருக்கிறார்.

ஒளிப்பதிவாலர் தீபக், பகல் இரவு காட்சிகளை பிரமாண்டமாக படம் பிடிச்சிருப்பதோடு, கதைக்களத்தையும் பிரமாண்டமாக படமாக்கி ரசிக்க வைக்கிறார். ஷீன் ரோல்டனின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கமர்ஷியலாக பயணித்திருக்கிறது.

படத்தின் ஆரம்பம் முதல் முடிவு வரை முழுக்க முழுக்க நகைச்சுவைக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுத்திருக்கும் இயக்குநர் கார்த்திக் யோகி, ரசிகர்களை வயிறு வலிக்க சிரிக்க வைத்து ரசிக்க வைக்கும்படி திரைகக்தை மற்றும் காட்சிகளை கையாண்டிருக்கிறார்.

மொத்தத்தில், குடும்பத்தோடு சிரித்து மகிழ்ந்து பார்ப்பதற்கான சரியான படம் இந்த ‘வடக்குப்பட்டி ராமசாமி’

- சென்னை பத்திரிகா சிவாஜி