’மறக்குமா நெஞ்சம்’ விமர்சனம்

’மறக்குமா நெஞ்சம்’ விமர்சனம்
’மறக்குமா நெஞ்சம்’ விமர்சனம்

’மறக்குமா நெஞ்சம்’ விமர்சனம்

பள்ளி மாணவரான ரக்‌ஷன், தன் வகுப்பு மாணவி மலினாவை காதலிக்கிறார். ஆனால், அந்த காதலை அவரிடம் சொல்லாமலேயே பள்ளி படிப்பை முடித்துவிடுகிறார். பள்ளி படிப்பை முடித்து 10 ஆண்டுகள் ஆனாலும், அவர் தனது முதல் காதலை மறக்காமல் இருப்பதோடு, நலினாவை மீண்டும் பார்ப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். இதற்கிடையே ரக்‌ஷன் படித்த பள்ளியின் மீது தொடர்ந்த வழக்கில், 2008 ஆம் ஆண்டு அப்பளியில் தேர்ச்சி பெற்ற 12ம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி செல்லாது என்றும், அந்த மாணவர்கள் மீண்டும் 12ம் வகுப்பு தேர்ச்சி எழுதி தேர்ச்சி பெற வேண்டும், என்றும் தீர்ப்பு வருகிறது.

இதனால், 2008 ஆம் ஆண்டு 12ம் வகுப்பு படித்த மாணவர்களுக்கு மூன்று மாதங்கள் பயிற்சி அளித்து மீண்டும் தேர்வு எழுதி வைத்து தங்கள் பள்ளி மீது விழுந்த கரையை துடைக்க பள்ளி நிர்வாகம் முடிவு செய்கிறது. அதன்படி, மாணவர்கள் அனைவரும் மீண்டும் பள்ளிக்கு வர, இந்த முறை எப்படியாவது தனது காதலை மலினாவிடம் சொல்லிவிட வேண்டும் என்று நினைக்கும் ரக்‌ஷன் அதை சொன்னாரா?, மலினா ஏற்றுக்கொண்டாரா? இல்லையா? என்பது தான் ‘மறக்குமா நெஞ்சம்’ படத்தின் கதை.

நாயகனாக நடிச்சிருக்கும் ரக்‌ஷன், பள்ளியில் படிக்கும் போதும், இளைஞராக நடிக்கும் போதும் நல்ல நடிப்பை வெளிப்படுத்தியிருக்கார். காதல், பயம், வெட்கம் என அனைத்து உணர்வுகளையும் காட்சிக்கு காட்சி தகுந்தாற்போல் நடிச்சு அப்ளாஷ் வாங்குகிறார்.

நாயகியாக நடிச்ச மலினா, பார்ப்பதற்கு அழகு, நடிப்பிலும் அழகு. கிடைச்ச சந்தர்ப்பத்தை சரியா பயன்படுத்தி நடிக்காங்க. நண்பர்களாக நடித்திருக்கும் தீனா, ராகுல் ஆகியோரது நடிப்பும் படத்துக்கு பெரிய பலம் சேர்த்திருக்கிறது. மாணவர்கள் வேடத்தில் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் குறையில்லாமல் நடித்திருக்கிறார்கள். பி.டி மாஸ்டராக நடித்திருக்கும் முனீஷ்காந்த் மற்றும் ஆசிரியையாக நடித்திருக்கும் அகிலா இருவரும் மனதில் நிற்கும்படி நடித்திருக்கிறார்கள். 

ஒளிப்பதிவு செய்திருக்கும் கோபி துரைசாமி, படம் பாக்குறவங்கள கன்னியாகுமரிக்கே அழைச்சிட்டு போயிடுறார். அந்த அளவுக்கு நேஞ்சுரலாக காட்சிகளை படமாக்கியிருக்கார்.

சச்சின் வாரியர் இசையில் பாடல்கள் எல்லாமே திரும்ப திரும்ப கேட்கும்படி இருக்கிறது. பின்னணி இசை கதைக்கு ஏற்ப பயணித்திருக்கிறது.

மொத்தத்தில், காதல்னு என்னவென்று தெரியாத பள்ளி பருவ காதலை, நம் மூச்சு உள்ளவரை நினைவில் வச்சிருக்கிறமாதிரி, இந்த படத்தையும் நம் நினைவில் வைக்கும்படி இயக்குநர் ராகோ.யோகேந்திரன் படத்தை கொடுத்திருக்கிறார்.

- சென்னை பத்திரிக்கா சிவாஜி