வர்ராரு வர்ராரு அண்ணாத்த தொகையறா

வர்ராரு வர்ராரு அண்ணாத்த

தொகையறா

அடிமை விலங்கு தெறிச்சிப்பறக்க
அடக்கும் திமிரை அடிச்சி நொறுக்க..

நடக்கும் நடையில் புரட்சி வெடிக்க..
நடிக்கும் பகையை வெரட்டியடிக்க..

நரம்பில் குருதி கொதிக்க கொதிக்க
நமட்டுச்சிரிப்பில் மிதிக்க மிதிக்க...

உலகம் முழுதும் வியக்க வியக்க
உடைஞ்சு விலங்கு தெறிச்சுப் பறக்கவே..

பல்லவி

வர்ராரு... வர்ராரு... அண்ணாத்த
நீ இனிமேலும் முடியாது ஏமாத்த....
எங்கண்ணன் மனசென்றும் பூமெத்த..
சீண்டிப்பார் காண்பாய் நீ புயல்காத்த...

அனுபல்லவி

கொடுத்து கொடுத்து சிவந்ததாரு..?
அடித்துப் பறிக்க தடுத்ததாரு?
புரட்சி தலைவர் எம்ஜியாரு
அடுத்து நமது சூப்பஸ்டாரு...

தறிக்க தறிக்க மொளச்சதாரு..?
பொதைக்க பொதைக்க பொழச்சதாரு..?
டாக்டர் கலைஞர் தாறுமாறு
அடுத்து நமது சூப்பஸ்டாரு...

அவர் முன்னேற முன்னூறு  
தட போட்ட...
அவர் அன்பாலே வென்றாரு 
தமிழ் நாட்ட..
அவர் பார்த்தாலே உருவாகும் புதுப்பேட்ட..
விரைவில் பார்ப்பாய் நீ எங்கண்ணன் வெளையாட்ட..

சரணம்-01

லேசா குனிஞ்சி சிரிச்சு நடந்தா 
'மாஸா' அண்ணன் இருப்பாரு..
வேசம்போட்டு மோசம் செஞ்சா 
கண்ணில் கண்பாய் நெருப்பாறு..

உசுரக் கூட கேட்டா கூட 
உடனே எடுத்துக் கொடுப்பாரு...
யாரும் தமிழ அழிக்க வந்தா 
அவங்க கதைய முடிப்பாரு...

கொழந்த போல மனசுக்காரன் 
உள்ளம் வெள்ள..
அவரப்போல ஒருத்தரநாம் 
கண்டதில்ல..
உதவி கேட்டா இல்லையென்றும்
சொன்னதில்ல..
அண்ணன் உலகத்தமிழன் 
யாவருக்கும் செல்லப்பிள்ள..

(குழு)
கும்மி கொட்டி ஆடுங்கடி 
கொரவ கொட்டிப் பாடுங்கடி
எங்க அண்ணாத்தைய 
வாழ்த்துங்கடி எல்லோரும்கூடி..

அண்ணன் நடந்தா சரவெடி 
சிரிச்சா நிற்கும் அடிதடி
எங்க அண்ணனுக்கு 
ரசிகர்தான் எத்தனைகோடி..

நாங்க எல்லோரும் 
இவர் மேலே பெரும் பாசம் 
அவரு ஸ்டைலுக்கே 
மயங்கியது பலதேசம் 
நண்பா யாருக்கும் 
செய்யாதே  பரிகாசம் 
அண்ணன் போல நீ
வாழ்ந்தாலே சந்தோஷம்.

(வர்ராரு)

சரணம்-02

அண்ணன் பேர சொல்லிச் சொல்லி நாளும் பொழுதும் கொண்டாடு...
"யாதூம் ஊரே யாவரும் கேளிர்"
அதுதான் தமிழன் பண்பாடு...

துன்பம் எல்லாம் தூக்கிப்போடு வாழ்வை ஜெயிக்கப்போராடு..
எங்க அண்ணன் பேச்சக்கேட்டு  
நாளும் வாழ்வோம் அன்போடு...

கோபம் வந்தா அண்ணனப்போல் கட்டிப்போடு..
கொடுமை கண்டா தயங்காதே வெட்டிப்போடு..
"ஒருவன் ஒருவன் முதலாளி" சொன்னதாரு...
இந்த உலகுக்கே அவர்தான்டா சூப்பஸ்டாரு...!

பாடலாசிரியர் அஸ்மின்