டொரண்டோவில் இருந்து பிரத்யோகமாக வரவழைக்கப்பட்ட பின்னணி பாடகி விதுசாயினி
டொரண்டோவில் இருந்து பிரத்யோகமாக வரவழைக்கப்பட்ட பின்னணி பாடகி விதுசாயினி :
கே ஜே எஸ் மீடியா புரோடக்சன்ஸ் கலசா ஜே.செல்வம் தயாரிக்கின்ற திகில் திரைப்படம் "கொத்தங்கோடு பங்களா" இதன் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இசையமைப்பாளரும் மறறும் நடிகருமான விஜய் ஆண்டனி சமீபத்தில் வெளியிட்டார் என்பது அனைவருக்கும் தெரிந்ததே.
இந்த படத்தில், புஷ்பா உட்பட பல திரைப்படங்களில் வெற்றிகரமாக பாடல்களை எழுதிக் கொண்டிருக்கும் கவிஞர் விவேகா அவர்கள் பாடல்கள் அனைத்தும் எழுதுகிறார் என்பது சிறப்பு.
இத்திரைப்படத்தின் மற்றொரு சிறப்பு,இசையமைப்பாளர் விது பாலாஜி கதாநாயகனாக நடிப்பதுதான்.
சமீபத்தில் இத்திரைப்படத்தின் டூயட் பாடலின் ஒளிப்பதிவு சென்னையில் நடைபெற்றது.இப்பாடலை பாட பாடகி விதுசாயினி பரமநாதன் பிரத்தியேகமாக கனடாவிலிருந்து வரவழைக்கப்பட்டார்.இவர் 2019ஆம் ஆண்டு ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்த்திய லைவ் இன் கான்செர்ட் நிகழ்ச்சியில் பாடுவதற்காக சென்னைக்கு வரவழைக்கப்பட்டார். இவர் இளைய தளபதி விஜய் நடித்த பிகில் திரைப்படத்தில் 'மாதரே...' எனும் பாடலை சின்மயியுடன் இணைந்து ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் பாடியுள்ளார்.அதன்பிறகு 2022ஆம் ஆண்டு "கொத்தங்கோடு பங்களா" திரைப்படத்தில் பாடுவதற்காக வரவழைக்கப்பட்டு இருக்கிறார்.
இப்பாடல் குறித்து இசையமைப்பாளர் விது பாலாஜியிடம் கேட்டபோது இந்த பாடல் ஒரு வித்தியாசமான காதல் பாடல்.இதற்கு வசீகரமான ஒரு குரல் தேவைப்பட்ட காரணத்தினால் நானும் இயக்குனரும் கலந்து உரையாடி இவரை கனடாவில் இருந்து வரவழைத்தோம்.
இந்தியாவிலேயே 50க்கும் மேற்பட்ட இசைக் கருவிகளை வாசிக்கக்கூடிய ஒரே மகத்தான இசைக்கலைஞர் இப்பாடலின் பின்னணி சேர்திருப்பது மற்றும் ஒரு சுவாரசியமான நிகழ்வு.
இத்திரைப்படத்தில் நாயகன் விது பாலாஜிக்கு இரண்டு கதாநாயகிகள். ஒருவர் கொல்கத்தாவில் பிரபலமான மாடலும்,மற்றொருவர் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகையாக திகழ்ந்து கொண்டிருப்பவர்.
இத்திரைப்படத்தின் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் கலாச ஜே.செல்வம் அவர்கள் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவிடம் 15 ஆண்டுகளாக ஒலிப்பதிவாளராக இருந்தவர்.அதனால் யுவனின் ஆசி பெற்று இத்திரைப்படத்தை துவங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.