A1 Movie Review

A1 Movie Review

Director:Johnson K

Cast;    Santhanam
Tara Alisha Berry
Rajendran
Manohar
Swaminathan
Saikumar
Yatin Karyekar
Music Director:    Santhosh Narayanan
Cinematography:    Gopi Jagadeeswaran
Editor:    Leo John Paul

காதலித்தால் ஐயர் ரௌடிப் பையனை காதலிப்பேன் என்கிறார் ஹீரோயின் சந்தானத்தை லோக்கல் பையன் என்பது தெரியாமல் காதலிக்கிறார். தன் தந்தைக்கு பிடிக்காததால் காதலலை முறித்துக் கொள்கிறார். ஊரே கொண்டாடும் தன் தந்தையை ஒரு சிறு தவறு செய்தவர் எனக் காட்டினால் காதலிக்கிறேன் எனச் சொல்ல, நண்பர்களிடம் உதவி கேட்கிறார் சந்தானம், நண்பர்கள் சந்தானம் காதலியின் தந்தையை கொலை செய்து விடுகிறார்கள் அதிலிருந்து எப்படி தப்பிக்கிறார். காதலியுடன் சேர்ந்தாரா என்பது தான் கதை

நீட்டி முழக்காமல் ஒரே பாடல் தொய்வில்லா திரைக்கதை சரியான் திருப்பங்கள் படத்தில் அமைந்திருப்பது சிறப்பு. சந்தானம் கொஞ்சம் சீரியஸ் மோடில் கொஞ்சம் ஹீரோவாக முயன்றிருக்கிறார் கொலைக்கு பிறகு வரும் சம்பவங்கள் அசத்தல் சிரிப்பு. ஹீரொயின் பேரழகு நடிப்பும் வருகிறது. தமிழ் சினிமாவுக்கு சரியான வரவு. 

குறும்பட இயக்குநரின் முதல் படம் குறும்படங்களில் உள்ள் அதிரடி திருப்பங்கள் படத்திலும் தெரிகிறது. கதையே சிறு சிறு குறும்படங்களாக பிரிந்து ஒவ்வொரு பிரச்சனையும் அதற்கு தீர்வு என விரிவது அழகு. சிரிப்பு படம் அதைச் சரியாகச் செய்துள்ளார். சந்தோஷ் நாரயணன் தேவையான இசையை தந்துள்ளார். மாலை நேரம் பாடல் மனதுக்குள் முணுமுணுக்கும். மொத்ததில் காமெடியில் கவர்கிறது ஏ1