*Anaconda is back on big screen - action, comedy, and creature chaos hits this Christmas*

*Anaconda is back on big screen - action, comedy, and creature chaos hits this Christmas*
_Starring Paul Rudd and Jack Black, the film releases on 25th December 2025 in English, Hindi, Tamil, and Telugu_
Sony Pictures Entertainment India has dropped the first trailer of Anaconda, bringing back the legendary creature feature with a thrilling and funny new spin. The action-adventure comedy, starring Jack Black and Paul Rudd, will hit cinemas in English, Hindi, Tamil, and Telugu on 25th December 2025.
Directed by Tom Gormican, the film follows Doug (Jack Black) and Griff (Paul Rudd) – two lifelong friends in the middle of a midlife crisis who set out to remake their favorite jungle movie. But when a real giant Anaconda crashes their passion project, the duo must turn from wannabe filmmakers into unlikely survivors in the Amazon.
Packed with creature thrills, hilarious misadventures, and edge-of-your-seat action, Anaconda promises to be a wild cinematic ride for audiences everywhere.
The film also stars Steve Zahn, Thandiwe Newton, Daniela Melchior, and Selton Mello. Produced by Brad Fuller, Andrew Form, Kevin Etten, and Tom Gormican, Anaconda is set to deliver an unforgettable mix of comedy and creature chaos.
_Sony Pictures Entertainment India releases in India this Christmas, 25th December 2025 in English, Hindi, Tamil, and Telugu._
*அதிரடி ஆக்ஷன், நகைச்சுவை, பரபரப்பு என இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு மீண்டும் திரைக்கு வருகிறது 'அனகோண்டா'!*
பால் ரூட் மற்றும் ஜாக் பிளாக் நடித்த இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் வெளியாகிறது.
'அனகோண்டா'வின் முதல் டிரெய்லரை சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா வெளியிட்டுள்ளது. ஆக்ஷன் அட்வென்ச்சர் மற்றும் நகைச்சுவையுடனும் பல திருப்பங்களுடனும் உருவாகியுள்ள இந்த டிரெய்லர் அனகோண்டாவை மீண்டும் ரசிகர்களுக்கு க
காட்டுகிறது. ஜாக் பிளாக் மற்றும் பால் ரூட் நடித்துள்ள இந்தப் படம் டிசம்பர் 25, 2025 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் திரையரங்குகளில் வெளியாகும்.
டாம் கோர்மிகன் இயக்கி இருக்கும் இந்தப் படம், டக் (ஜாக் பிளாக்) மற்றும் கிரிஃப் (பால் ரூட்) ஆகிய இருவரையும் மையமாகக் கொண்டு நகர்கிறது. நீண்ட கால நண்பர்களான இருவரும் நடுத்தர வயதின் நெருக்கடியில் இருக்கிறார்கள். தங்களுக்குப் பிடித்த ஜங்கிள் மூவியை மீண்டும் உருவாக்கத் திட்டமிடுகிறார்கள். ஆனால் ஒரு ராட்சத அனகோண்டா அவர்களின் ஆர்வத்தை முறியடிக்கிறது. இதனால், இருவரும் திரைப்படம் எடுப்பதை விட அமேசான் காடுகளில் உயிர் பிழைத்தாக வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுகிறார்கள்.
பரபரப்பு, அட்வென்ச்சர், நகைச்சுவை, ஆக்ஷன் என பார்வையாளர்களை சீட்டின் நுனிக்கு கொண்டு வரும் என 'அனகோண்டா' உறுதியளிக்கிறது.
இந்தப் படத்தில் ஸ்டீவ் ஜான், தாண்டிவே நியூட்டன், டேனிலா மெல்ச்சியர் மற்றும் செல்டன் மெல்லோ ஆகியோரும் நடித்துள்ளனர். பிராட் புல்லர், ஆண்ட்ரூ ஃபார்ம், கெவின் எட்டன் மற்றும் டாம் கோர்மிகன் ஆகியோர் 'அனகோண்டா' திரைப்படத்தைத் தயாரித்துள்ளனர்.
இந்த வருடம் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு,
சோனி பிக்சர்ஸ் என்டர்டெயின்மென்ட் இந்தியா டிசம்பர் 25, 2025 அன்று இந்தியாவில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் 'அனகோண்டா' திரைப்படத்தை வெளியிடுகிறது.