April 21,2017
மதுரை மாவட்டம் மேலுரை சேர்ந்த கதிரேசன்-மீனாட்சி தம்பதியினர் நடிகர் தனுஷ் தங்களது மகன் என்று மேலூர் கோர்ட்டில் கடந்த டிசம்பர் மாதம் மனுதாக்கல் செய்தனர்.
இந்த மனுவை ரத்து செய்யக்கோரி நடிகர் தனுஷ் சார்பில் மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில், தனுஷின் கோரிக்கையை ஏற்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கதிரேசன்-மீனாட்சி தம்பதி தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளனர்.
இது குறித்து பேசிய மேலூர் தம்பதியினர், மதுரை ஐகோர்ட் அளித்த தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம், தனுஷ் தங்கள் மகன் தான் என்பதை நிரூபிப்போம் என்று கூறினர்.