ad11

நான் அரசியலுக்கு வர கூடாதா? ரஜினிகாந்த் அதிரடி பேச்சு

May 19,2017  

rajinikanth meets his fans for the fifth day
சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை 5-வது நாளாக இன்றும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து...

சென்னை கோடம்பாக்கத்தில் உள்ள ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களை 5-வது நாளாக இன்றும் நடிகர் ரஜினிகாந்த் சந்தித்து வருகின்றனர். அப்போது ரசிகர்கள் மத்தியில் பேசிய நடிகர் ரஜினிகாந்த், "கடந்த 45 ஆண்டு காலமாக என்னை வாழ வைத்தவர்கள் தமிழ் மக்கள். நான் பச்சை தமிழன்; என்னை தமிழனாக ஆக்கியவர்கள் நீங்கள்தான்.

என்னை வாழ வைத்த மக்கள் நன்றாக இருக்க வேண்டும் என நான் நினைக்க கூடாதா? அதற்காக நான் அரசியலுக்கு வர கூடாதா? அதற்காக வேறு யாரும் இல்லையா? என கேட்கிறார்கள், இருக்கிறார்கள். ஸ்டாலின் நல்ல திறமையானவர், அன்புமணி நல்ல கல்வியாளர், உலகம் முழுவதும் சுற்றி வந்தவர். திருமாவளவன் தலித்துகளுக்காக போராடக் கூடியவர். சீமான் நல்ல போராளி.

ஆனால் தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் நன்றாக இல்லை. அதனை சரி செய்ய மக்கள் சிந்தனையில் மாற்றம் வர வேண்டும். தமிழகத்தில் அனைவரும் இணைந்து தான் அரசியல் மாற்றத்தை கொண்டு வர முடியும்.

அரசியல் குறித்த எனது பேச்சு இவ்வளவு சர்ச்சைக்கும் விமர்சனத்துக்கும் உள்ளாகும் என எதிர்ப்பார்க்கவில்லை. சிலரின் எதிர்ப்புதான் நாம் வளர உதவும். எனக்கென தனிப்பட்ட கடமைகள், வேலைகள், தொழில் உள்ளது. உங்களுக்கும் குடும்பம், பொறுப்புக்கள் உள்ளது. அதனால் பொறுமையாக இருங்கள், போர் வரும் போது களத்தில் இறங்குவோம், இவ்வாறு ரஜினிகாந்த் பேசினார்.