ad11

அன்பானவன் அசராதவன் அடங்காதவன் - விமர்சனம்

June 27,2017  

Anbanavan Asaradhavan Adangadhavan Movie Review

ஒன்றுக்கே ஸ்கிரீன் தாங்காது ...என்றாலும்., எஸ்.டி.ஆர் - சிம்பு மூன்று கெட் - அப் களில் நடிக்க, அவருடன் ஸ்ரேயா, தமன்னா ஜோடி போட யுவன் சங்கர் ராஜா இசையில் .," த்ரிஷா இல்லேன்னா நயன்தாரா" எனும் ''ஏ" ப்பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரனின் இயக்கத்தில் ., குளோபல் இன்போடெயின்மென்ட் எஸ்.மைக்கேல் ராயப்பன் தயாரித்து வழங்க, வந்திருக்கும் படம் தான் "அன்பானவன்அசராதவன்அடங்காதவன் ".

உயிருக்கு உயிராக காதலித்து, ரகசியமாக தாலியும் கட்டிய பின்., ஸ்ரேயாவின் வாழ்க்கை சிறக்க வேண்டும் என்பதற்காக அவரையும், அந்த ஊரையும் விட்டு., துபாயில் போய் டான் அஸ்வினாக திரும்பும் மதுரை தாதா மைக்கேல் - எஸ்.டி.ஆர்., ஜம்பத்தைந்து வயதுக்கு அப்புறம் இன்னொரு காதலில் விழுகிறார். இளம் பெண் தமன்னாவை இன்னும் டீப் பாக காதலிக்கிறார். அந்தக் காதலும் தன் சாயலை ஒத்த அமெரிக்கா ரிட்டர்ன் எஸ். டி. ஆர். என்ட்ரி ஆனதும் கை கூடாது போகும் சூழல் வர ., மீண்டும் கெட்டவன் ஆகிறார். அப்புறம் ? அப்புறமென்ன .? மீதி அடுத்தப் பாகத்தில் என அதிர்ச்சி தந்து இந்தப் படத்தை ஒரு வழியாக முடிக்கிறார்கள். ஸ் ... அப்பா தாங்கல ...

படம் முழுக்க ஏகப்பட்ட லாஜிக் குறைகள். சிம்பு , ஏன் துபாய் போனார் ? அங்கு எப்படி டான் ஆனார் ...? எனும் விஷயங்கள் காட்சிப்படுத்தப்படாதது சுத்த போர். அதை விட பெரிய போர் மொத்தப் படமும் சிம்பு புராணம் பாடும் விதத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் விதம் .

கதாநாயகராக மதுரை மைக்கேல் ஆக , அடாவடி அதிரடி பேர்வழியாக வரும் எஸ்.டி.ஆர் சிம்பு ஆகட்டும், துபாய் தாத்தா அஸ்வின் ஆக வரும் எஸ். டி ஆர். சிம்பு ஆகட்டும் இருவருமே ஹைபிச்சி லேயே பேசி ரசிகனுக்கு கசையடிக்கொடுக்கின்றனர். அதிலும், தன் அபிமான நடிகர் தல ஸ்டைலில் சால்ட் பெப்பர் ஹேர்ஸ்டைலில் வரும் அஸ்வின் தாத்தா ., அய்யோ முடியலைடா சாமீ... இதில் ,கொஞ்ச நேரமே வந்து , இதன் பார்ட்-2வில் வர இருக்கும் அமெரிக்க ரிட்டர்ன் திக்கு -சிவா வாக வரும் எஸ்டி ஆர் சிம்பு மட்டுமே கம்மி பேச்சிலும், களையான முகத்திலும் கொஞ்சமே கொஞ்சம் ஆறுதல்.

"ட்ரிங்ஸ் விட இன்ஜூரியஸ் டூ ஹெல்த் லவ் தான் "என அங்காலயிப்பதிலாகட்டும், "நான் சொன்ன நேரத்துக் கெல்லாம் வர மாட்டேன் நினைச்ச நேரத்துக்கு தான் வருவேன் ...." என திமிர் காட்டுவதிலாகட்டும் ," நான் மோசமானவன் தான் ஆனால், கேவலமானவன் கிடையாது ... ஆனா , கொஞ்சம் கெட்டவன் ... " என டயலாக் அடிப்பதிலாகட்டும் ., க்ளைமாக்ஸுக்கு முன் சூப்பர் ஸ்டார் ரஜினி மாதிரி பியானோ வாசிப்பதிலாகட்டும் ... பாடல் காட்சி ஒன்றில் எம் ஜி ஆர் மாதிரி எஸ் டி ஆரும் என வரிகளை வடித்திருப்பதிலாகட்டும் சகலத்திலும் ஒவர் தற்பெருமையில் தன்னிலை மறந்திருக்கிறார் எஸ் டி ஆர்.சிம்பு. இது ரொம்ப தப்பு தம்பு!

அதே மாதிரி, இது நம்ம கல்சருக்கு ஒரு மைனஸ் அப்படிம்பாங்க ... அதனால என்ன ? என முறையற்ற காதலை ஆதரித்து, அலட்டிக் கொள்ளாமல் பேசுவதில் சிம்புவை அடித்துக்கொள்ள ஆளே இல்லை ... என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார்.எஸ்டி ஆர்.சிம்பு .என்ன தைரியும்.!?

ஸ்ரேயா, தமன்னா இரு நாயகியரில் ஸ்ரேயா, கிராமியலுக்கிலும் தமன்னா மார்டன் லுக்கிலும் எஸ்டிஆரை மட்டுமின்றி ஆடியன்ஸையும் அப்படியே சாப்பிட முயன்றிருக்கின்றனர்.. என்பது சற்றே ஆறுதல்.

அதிலும், "அங்கு உன்கிட்ட ரஜினிகாந்தைப் பார்த்தேன் ... காபி ஷாப்பில் ஒரு கமலை பார்த்தேன் மொத்தத்தில் ஒரு சிலம்பரசனைப் பார்த்தேன் ... " என தமன்னா சிம்புவைப் பார்த்து வாய் பிளப்பதும் , ' "பொண்ணுங்களை பின்னாடி தட்டுற உங்களை மாதிரி பொட்ட பசங்களை லவ் பண்றதை விட இது மாதிரி தாத்தாவையே லவ் பண்ணலாம் டா ..." என அஸ்வின் தாத்தா எஸ்.டி.ஆரை உசுப்பேத்தி விடுவதமாக நாயகியரால், தியேட்டரில் ஒரே ரணகளம்.

கெஸ்ட் ரோலில் சில நிமிடங்களே வரும் ஜி.வி. பிரகாஷ் குமார் ., "தாத்தா எஸ் டி ஆருக்கு இந்த வயசுல உனக்கென்ன லவ்வுன்னு..?" அட்வைஸ் செய்வதிலும் ."என்ன மாதிரி சின்ன பசங்களையே ஏமாத்துறாளுங்க ... பொன்னுங்க ... உன்னை மாதிரி கிழவன்களை ஏமாத்தமாட்டங்களா ?" என கேட்பதிலும் ஜி.வியிடம் அட்வைஸ் கேட்கும் சிம்புவின் நிலை கண்டு தியேட்டர் அதிர்கிறது. எஸ்.டி ஆர். ரசிகர்கள் எக்கச்சக்கமாக கடுப்பாகின்றனர்.

மகத் ,விடிவி. கணேஷ் , கோவை சரளா, கஸ்தூரி, ஒய்.ஜி மகேந்திரன், சண்முகசுந்தரம், மொட்டை ராஜேந்திரன், சுவாமிநாதன், பாண்டு, சிங்கமுத்து ... உள்ளிட்ட நட்சத்திரங்கள் மொத்த பேரும் எஸ் .டி .ஆர் புராணம் பாடியிருப்பது ரொம்பவும் கடுப்பேற்றுகிறது.

ரூபனின் படத்தொகுப்பு, ரசிகனை மேலும் , படுத்தும் பாடாவதி தொகுப்பு. காட்சிகள் ஒவ்வொன்றும் கிருஷ்ணன் வசந்தின் ஒளிப்பதிவில் , ஓ.கே பதிவென்பது ஆறுதல் .யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ., "இன்னைக்கு நைட்டு மட்டும் நீ காதல் பண்ணா போதும் ... " எனத் தெரடங்கித் தொடரும் பாடல்கள் இனிமை, இளமை.

ஆதிக் ரவிச்சந்திரனின் எழுத்து, இயக்கத்தில்., "வெர்ஜினா பொறக்கறது நம்ம தப்பில்ல வெர்ஜினா சாகறது தான் நம்ம தப்பு ... ", "லவ் வெல்லாம் மேட்டர் அல்ல ... மேட்டர் தான் லவ்வுன்னு புரிய வச்சீங்களே ... " உள்ளிட்ட வசனங்களும் , வெர்ஜின் பையன் சாபம் .. கன்னி பொண்ணு பாவம் .... என சம்பந்தர சம்பந்தமில்லாது அடிக்கடி வரும் புலம்பல்கள் பலவீனம். என்றால் ., ,"காதலிச்ச பொண்ண அடையறது காதல் இல்ல ... காதலிச்ச பொண்ணு நல்லா வாழட்டும்னு நாம வாழாறது தான் உண்மையான காதல் ...." என., தொட்டு தாலி கட்டிய ஸ்ரேயாவை அம்போ என விட்டுச் செல்லும் எஸ்.டி.ஆர் பேசும் டயலாக் பெரும் பலவீனமாகும்.

அதே மாதிரி., எஸ்.டி.ஆர் அவலை நினைத்துக் கொண்டு உரலை இடிக்கும் கதையாக படம் முழுக்க ஒய்.ஜி.எம் கூட லிப் டூ லிப் கிஸ் சீன் அடித்து கரண்ட் எடுக்கும் காட்சிகள் "உவ்வே"ரகம் என்றால் ., போலீஸ் கஸ்தூரி , "ஏன் தமிழன்ஸ் கருப்பா இருக்கு ...? "எனக் கேட்கும் வெள்ளைக்காரரிடம் ., "உங்க வெள்ளக்கார ஆட்சியில நீங்க நைட் கதவை தட்டும் போது நாங்கத் திறக்கலையில்ல ... அதான் அந்த இருட்டுல இருந்ததால கருப்பா இருக்கோம்." எனும் ஆபாசபதிலில் இருக்கும் நாராசமும் தேவையா ? என்பதையும் இயக்குனர் யோசித்திருக்கலாம்.

இதற்கும் மேல் ., க்ளைமாக்ஸில், தாத்தா அஸ்வின் -வெஸ்- திக்குவாய் சிவா என இரண்டு எஸ்.டி.ஆருக்கும் இடையேயான முட்டல், மோதல் எதிர்பார்ப்பு கூட்டும் நம்பிக்கையோடு இரண்டாம் பாகத்திற்கான அழைப்பு விடுத்து ., படத்தை முடிப்பது சகிக்கலை.

மொத்தத்தில்., எஸ்.டிஆர் .சிம்பு -ஆதிக் ரவிச்சந்திரன்.. கூட்டணியின் .,"அ, அ , அ' - 'ஏ, ஏ , ஏ... படமாகும்!"