ad11

வனமகன்- சினிமா விமர்சனம்

June 27,2017  

Jayam Ravi Vanamagan movie review

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில் ... அவரது, ஐம்பதாவது படமாக 'பிக் ஸ்டுடியோஸ்', ஏ.எல் அழகப்பன் தயாரிப்பில், விஜய் எழுத்து., இயக்கத்தில் ஜெயம் ரவி - புதுமுகம் சாயீஷா ஜோடி நடிக்க., வந்திருக்கும் படமான "வனமகன்"னில் , "ஒரு காதல் பின்னணியில் அந்தமான் காட்டுவாசிபழங்குடியினரின் அழகிய வாழ்வியலை அதிரடி கலந்து சொல்லியிருக்கின்றனர்."

கதைப்படி ., அந்தமான் தீவின்காட்டுவாசி இளைஞரான ஜாரா -ஜெயம் ரவி ., அரசு அதிகாரிகள் உதவியுடன் , பன்னாட்டு நிறுவனத்தால் ஆக்கிரமிக்கப் பார்க்கப்படும் ., தங்கள் வாழ்விடத்தை தக்கவைத்துக் கொள்ள போராடுகிறார். இந்நிலையில் ., அந்தமான் நிக்கோபர் தீவுகளுக்கு தனி விமானத்தில் சுற்றுலா வரும் சென்னை கோடீஸ்வர இளம் பெண் காவ்யா - சாயீஷாவும் , அவரது நண்பர்களும், அந்தமான் காடுகளில் வனத்துறையின் கட்டுப்பாடுகளுக்கு செவிசாய்க்காது., காட்டிற்குள் தங்களது வாகனத்தில் த்ரில் உலா வரும் போது ., திடீரென பறந்து வந்து அவர்களது , காரில் மோதி விழும் காட்டுவாசிநாயகர் ஜாரா -ஜெயம் ரவியை., வனத்துறை அதிகாரிகளிடம் தங்கள் தரப்பு எந்த விதத்திலும் மாட்டிக் கொள்ளக் கூடாது என்பதற்காக அவரது மயக்க நிலையிலேயே யாருக்கும் தெரியாமல் விமானத்தில் கடத்தி வந்து சென்னையில் சிகிச்சை அளித்து பிழைக்க வைக்கின்றனர். ஜாராவைத் தேடிப் பிடித்து வனத்துறை அதிகாரிகள்., அடித்து துவைத்து சிறையில் தள்ள களம் இறங்குகின்றனர். சென்னை வந்த சில நாட்களிலேயே காவ்யாவின் மனச்சிரையில் சிக்கிய ஜாரா வனத்துறையிடம் இருந்து ,தப்பி பிழைத்தாரா ? தன் சமூக வாழ்விடத்தை தக்கவைத்துக் கொண்டாரா ...? என்பது தான் " வனமகன்" படத்தின் கதை மொத்த மு ம்!

ஜாரா எனும் காட்டுவாசியாக, அதிகம் வாயே திறக்காமல், தன் பார்வையாலும் உடல் மொழியாலும். ஜெயம்ரவி எக்கச்சக்கமாக மிரட்டியிருக் கிறார். ஆனாலும் , இண்டர்வெல்லுக்குப் பின் ., காட்டிற்குள் காட்டுவாசியாக அவர் கர்ஜிக்கும் அளவிற்கு ., இண்டர்வெல்லுக்கு முந்தைய முன்பாதியில் மொழி தெரியாத சென்னையில் பங்களாவிற்குள்.,முறைத்துக் கொண்டு அவர் திரிவது அவ்வளவாக எடுபடாதது சற்றே இடிக்கிறது.

அதே மாதிரி காட்டுமரத்தில் லாவகமாக ஏறி .,தேனடை எடுக்கும் அந்த காட்சி உள்ளிட்ட காட்சிகளில் நாயகர் ரவி , காட்டுவாசியாகவே வாழ்ந்திருப்பதும் பெரும் பலம் . காவ்யாவாக. இந்தி நடிகர் தீலீப் குமாரின் பேத்தி சாயீஷா., கொள்ள அழகு . கொஞ்சும் நடிப்பு என அசத்தியிருக்கிறார். கொஞ்சம் முயற்சித்தால் அம்மணி, தமிழில் முதல் இடத்தைக் கூட அசால்ட்டாய் பிடிக்கலாம்.

வில்லனாக நாயகியின் அப்பாவைக் கொன்று நாயகியை தன் மகனுக்கு கட்டி வைக்கத் துடிக்கும் பிரகாஷ்ராஜ் ,, அவரது மகன் விக்கியாக வரும் வருண், இருவரும் வில்லன்களாக புகுந்து விளையாடி இருக்கின்றனர்

காமெடியனாக நாயகி வீட்டு தலைமை சமையல்காரர் பாண்டியாக தம்பி ராமைய்யா , காமெடி செய்வது , சில இடங்களில் , சிரிப்பு. நாயகியின் சித்தப்பாவாக வரும் "தலைவாசல்" விஜய்யும் நச்சென்று நடித்திருக்கிறார். போலீஸ் ஆபிஸர் சண்முகராஜன், ரவியின் காட்டு தந்தை வேல ராமமூர்த்தி , காம்பயர் ரம்யா , அர்ஜுன் , ஷாம்பால் ... ஆகியோரும் செம கச்சிதம்..

காட்டுவாசிகளின் ஆயுதங்களை வைத்து ஸ்டண்ட் சில்வா அமைத்திருக்கும் சண்டை பயிற்சியும் காட்சிகளும் வன மகனுக்கு பெரிய ப்ளஸ். ஆண்டனியின் படத்தொகுப்பில் குறை இல்லை. திரு எனும் எஸ்.திருநாவுக்கரசன் ஒளிப்பதிவில், மலை, குகை, அருவிகள் ... எனபச்சை பசேல் ..அந்தமான் நம் கண்களுக்கு குளிர்ச்சியாக கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது! வாவ்!

ஹாரீஸ் ஜெயராஜ் இசையில்., கார்கியின் வரிகளில் , "பச்சை உடுத்திய காடு ... ", "முரடா முரடா ...", "சிலுசிலுவென்று.." பாடல்களும் , பின்னணி இசையும் வன மகனுக்கு வளம் , பலம் சேர்த்திருக்கிறது!

இயக்குனர் விஜய்யின் இயக்கத்தில் ., சற்று மெதுவாக நகரும் முன் பாதி குறை. மேலும், பாஷை புரியாத சென்னை நகரத்தில் .,ரம்யாவை அவர் கணவரிடம் சேர்க்க சென்னை சாலையில் தூக்கிக் கொண்டு ஓடும் சீனும் செயற்கையாய் இருக்கிறது. அதே மாதிரி ., ஹீரோ என்ன தான் காட்டுவாசி என்றாலும் .,புலிக்கு தையல் போட்டு காப்பாற்றியதால், அது இவரை பிரிதொரு சீனில் கொல்லாது விடும் காட்சிகளும் கொஞ்சம் ஓவராகத் தெரிகிறது. இவற்றை எல்லாம் ஒதுக்கிவிட்டுப் பார்த்தால் ., இப்படத்திற்கு , "வனமகன்" எனும் டைட்டிலும் , .மேலும், சூரிய வெளிச்சத்தில் பருந்து பறக்கும் காட்சி, உள்ளிட்ட இயற்கை எழில் கொஞ்சும் காட்சிகளும் பலம்

மொத்தத்தில் ., "காட்டுல இருக்குற எல்லோரும் மிருகமும் இல்ல .. நாட்டுல இருக்குற எல்லோரும் மனுஷனும் கிடையாது..." எனும் கருவுடன் வந்து., "காட்டுவாசி மனிதர்களின் உன்னதத்தையும் உயரிய குணத்தையும் மிக நேர்த்தியாக பேசியிருக்கும் 'வனமகன் '- 'வண்ணமகன்' - 'வசூல் மகன்!"