திரைக்கதை அமைக்க 3வருடங்கள்! உண்மைக்கதை என்பதால் நிறைய பிரச்சனைகள் வருமென்பது தெரியும்!! ‘குருப்’ படம் பற்றி துல்கர் சல்மான்.
திரைக்கதை அமைக்க 3வருடங்கள்!
உண்மைக்கதை என்பதால் நிறைய பிரச்சனைகள் வருமென்பது தெரியும்!!
‘குருப்’ படம் பற்றி
துல்கர் சல்மான்.
கேரளாவில் மிகப்பெருமளவில் பேசப்பட்ட குற்றவாளியும், இந்தியளவில் போலீஸால் தேடப்பட்ட குற்றவாளி “குரூப்” - இன் கதையை மையமாக கொண்டு, இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ‘குரூப்”. இப்படத்தின் டிரெய்லர் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அசத்தலான ஒளிப்பதிவு, பரபரக்கும் படத்தொகுப்பு, பிரமாண்ட மேக்கிங் என படத்தின் ஒவ்வொரு சிறு விசயமும், ரசிகர்களை ஆச்சர்யப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. மொழி தாண்டி, அனைவரிடமும் மிகப்பெரும் எதிர்பார்ப்பை கிளப்பியிருக்கும் ‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 இந்த வாரம் நவம்பர் 12 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
“குரூப்” படம் குறித்து துல்கர் சல்மான் கூறியதாவது..
இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் என்னுடன் இணைந்து தான் திரைத்துறைக்கு வந்தார். நானும் அவரும் நெருங்கிய நண்பர்கள், எங்களது முதல் படத்திலேயே ‘குரூப்’ பற்றி நிறைய விஷயங்களை பேசிக்கொண்டிருப்பார். எப்படியாவது இந்தப்படத்தை நான் கண்டிப்பாக எடுப்பேன் என்று சொன்னார். அந்த நேரத்தில் இவ்வளவு பெரிய பட்ஜெட்டில் படம் எடுக்க முடியுமா என்று எனக்கு தயக்கமாக இருந்தது. ஆனால் இப்போது மீண்டும் சில வருடங்கள் முன் ‘குரூப்’ ஒரு நல்ல திரைக்கதையாக வந்திருக்கிறது என்று சொன்னார். திரைக்கதை ஸ்டைலே புதிதாக இருந்தது. கண்டிப்பாக இப்படத்தை பண்ணவேண்டும் அப்போதுதான் முடிவு செய்தோம்.
குரூப் குடும்பத்திலிருந்து ஏதாவது பிரச்னை வரும் என்ற யோசனை இருந்தது. நல்ல வேளை எந்த ஒரு தடையும் வரவில்லை! ஆனால் விக்டிம் குடும்பத்திலிருந்து எவரும் பாதிக்கப்படக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தோம். படம் உருவான பிறகு அவர்களை அழைத்து, படத்தை போட்டுக்காட்டினோம். உங்களுக்கு தவறாக எதாவது தோணினால் சொல்லுங்கள் மாற்றி விடுகிறோம் என்றோம். அவர்கள் மனதின் வலியை வைத்து கொண்டு பணம் சம்பாதிப்பது எங்கள் நோக்கமில்லை. அவர்களுக்கு படம் பிடித்திருந்தது அதுவே எங்களுக்கு மகிழ்ச்சி தான். இந்தப்படத்திற்குப்பின் கடும் உழைப்பு இருக்கிறது. மூன்று வருட ஆராய்ச்சிக்கு பிறகு தான் திரைக்கதையெய் அமைத்தேன். ஒவ்வொரு நடிகர்களுமே உண்மையில் வாழ்ந்தவர்களை பிரதிபலித்துள்ளார்கள். அந்த கால கட்டத்தை கொண்டு வருவது எல்லாம் மிக கடினமாக இருந்தது. அந்த கால மும்பையை எல்லாம் திரும்ப திரையில் கொண்டு வந்திருக்கிறோம். ‘குரூப்’ எனக்கு மிக சவாலாக இருந்த படம் என் வாழ்வில் மிக முக்கியமான படமும் கூட. ரசிகர்களுக்கு மிகச்சிறந்த அனுபவத்தை தரும் என்றார்.
“குருப்” திரைப்படம் தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் வெளியாகிறது.
இப்படத்தில் ஷோபிதா துலிபலா, இந்திரஜித் சுகுமாரன், ஷைன் டாம் சாக்கோ, ஷன்னி வேய்ன், டொவினோ தாமஸ், ஷிவஜித், பத்மனாபன், சுதீஷ், அனுபமா பரமேஸ்வரன், விஜயராகவன் சுரபி லக்ஷ்மி, கிரிஷ், குஞ்சன், சாதிக் மற்றும் பரத் முக்கிய வேடத்தில் ஆகியோர் நடித்துள்ளார்.
“குருப்” படத்தினை இயக்குநர் ஶ்ரீநாத் ராஜேந்திரன் இயக்கியுள்ளார். நிதின் K ஜோஷ் கதையினை எழுதியுள்ளார். திரைக்கதை மற்றும் வசனத்தை டேனியல் சயூஜ் நாயர் & KS அரவிந்த் இணைந்து
எழுதியுள்ளனர். Wayfarer Films & M-Star Entertainments இணைந்து இப்படத்தினை தயாரித்துள்ளார்கள். நிமிஷ் ரவி ஒளிப்பதிவு செய்ய, விவேக் ஹர்ஷன் படத்தொகுப்பு செய்துள்ளார். சுஷின் ஸ்யாம் இசை பின்னணி கோர்ப்பை செய்துள்ளார். வினி விஸ்வா லால் கிரியேட்டிவ் இயக்குநராக பணியாற்றியுள்ளார். பங்லன் கலை இயக்கம் செய்ய, விக்னேஷ் கிஷன் ராஜேஷ் ஒலி வடிவமைப்பு செய்துள்ளார். ரோனக்ஸ் சேவியர் மேக்கப் பணிகள் செய்ய, பிரவீன் வர்மா உடை வடிவமைப்பு செய்துள்ளார். தீபக் பரமேஸ்வரன் புரொடக்சன் கண்ட்ரோலராக பணியாற்றியுள்ளார்.
‘குரூப்’ திரைப்படம் வரும் 2021 நவம்பர் 12 திரையரங்குகளில் வெளியாகிறது