விஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த பாகிஸ்தான்!

 விஜய் பட நாயகிக்கு எதிராக ஐநாவில் புகார் அளித்த பாகிஸ்தான்!

விஜய் நடித்த 'தமிழன்' படம் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரியங்கா சோப்ரா அதன்பின்னர் பாலிவுட், ஹாலிவுட் என உலகப்புகழ் பெற்றார். இந்த நிலையில் சமீபத்தில் காஷ்மீரில் 370வது சிறப்பு பிரிவு ரத்து செய்யப்பட்டதற்கு பிரியங்கா சோப்ரா ஆதரவு தெரிவித்தார். இந்த நிலையில் காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவுக்கு ஆதரவாக தொடர்ந்து பேசி வருவதால், ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதரகராக உள்ள பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவை திரும்ப பெறுமாறு ஐநா சபைக்கு பாகிஸ்தான் அரசு கடிதம் எழுதியுள்ளது. 

ஏற்கனவே பாகிஸ்தானை சேர்ந்த ஒரு பெண் ரசிகை, பிரியங்கா சோப்ராவிடம் இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, பாகிஸ்தானில் எனக்கு அதிக நண்பர்கள் இருக்கிறார்கள். நான் போரை தூண்டுபவர் அல்ல. ஆனால் அதே நேரத்தில் நான் ஒரு இந்தியர் என்பதால் எனக்குள் தேசபக்தி இருக்கிறது. இதற்காக என்னை நேசித்த, நேசித்துக் கொண்டிருப்பவர்களின் மனம் காயப்பட்டிருந்தால் வருந்துகிறேன். நாம் அன்பு செலுத்தவே இங்கு உள்ளோம்' என்று அந்த ரசிகைக்கு பதிலடி கொடுத்திருந்தார் பிரியங்கா சோப்ரா என்பது குறிப்பிடத்தக்கது.