அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்

அனைத்து வயது பெண்களும் சபரிமலை செல்லலாம்

புதுடெல்லி: கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோவிலில் குறிப்பிட்ட வயதுடைய பெண்கள் நுழைய தடை உள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்குகளை 5 நீதிபதிகள் அடங்கிய அமர்வு விசாரித்து வந்தது.

இநிநிலையில், இன்று இந்த வழக்கின் தீர்ப்பு வழங்கப்பட்டது, இதில் தலைமை நீதிபதி தனது தீர்ப்பில், "நீண்டகாலமாக பெண்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. பக்தி என்பது பாலின பாகுபாட்டுக்கு அப்பாற்பட்டது. பெண்கள் என்பவர் ஆண்களுக்கு சமமானவர்களே. பெண்களை தெய்வமாக வணங்கும் நாட்டில் பெண்கள் பலவீனமானர்கள் அல்ல” என குறிப்பிட்டார்.

இதனை அடுத்து, அனைத்து வயது பெண்களும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு செல்லலாம் என 4 நீதிபதிகள் ஒரே தீர்ப்பாக வழங்கினர், இதில் நீதிபதி இந்து மல்ஹோத்ரா மட்டும் மாற்று கருத்தை கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.