’அஞ்சாமை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’அஞ்சாமை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’அஞ்சாமை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’அஞ்சாமை’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

ஹீரோ விதார்த்தின் மகன் அரசு பள்ளியில் படிக்கிறார். 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் மாவட்ட அளவில் முதலிடம் பிடிக்கும் அவருக்கு பல முன்னணி தனியார் பள்ளிகள் இலவசமாக தங்களது பள்ளிகளில் படிக்க வைக்க முன் வந்தாலும், அவற்றை நிராகரித்துவிட்டு, தொடர்ந்து அரசு பள்ளியில் தனது மகனை விதார்த் படிக்க வைக்கிறார். அதே சமயம், நன்றாக படிக்கும் விதார்த்தின் மகனுக்கு மருத்துவம் படிக்க வேண்டும் என்பது தான் லட்சியம். மகனின் லட்சியத்திற்காக கடுமையாக உழைக்கிறார் விதார்த். 

இந்த நிலையில், மருத்துவ படிப்பிற்கான தகுதி தேர்வான நீட் தேர்வு அமல்படுத்தப்படுகிறது. தாய்மொழியில் பள்ளி படிப்பை முடித்த விதார்த்தின் மகன் நீட் தேர்வுக்காக தயராக பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிய சூழல் ஏற்படுகிறது. மகனின் ஆசையை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று போராடும் விதார்த், மகன் எழுத இருந்த நீட் தேர்வால் என்னவானார் என்பதை வலிமிக்க வகையில் சொல்வது தான் ‘அஞ்சாமை’.

ஏழை விவசாயியாக நடித்திருக்கும் விதார்த், அவரது மகனாக நடித்திருக்கும் கிருத்திக் மோகன், வழக்கறிஞராக நடித்திருக்கும் ரஹ்மான், விதார்த்தின் மனைவியாக நடித்திருக்கும் வாணி போஜன் ஆகியோரது நடிப்பு, கதையில் இருக்கும் வலியை மக்களிடத்தில் எளிதியில் கடத்தி விடுகிறது.

ஒளிப்பதிவாளர் கார்த்திக், நட்சத்திரங்களை கதாபாத்திரங்களாக பயணிக்க வைத்து திரைக்கதைக்கு பலம் சேர்த்திருக்கிறார். ராகவ் பிரசாத்தின் இசையில் பாடல்களும், பின்னணி இசையும் கதைக்கு ஏற்ப பயணித்து கவனம் ஈர்க்கிறது.

நீட் தேர்வின் மூலம் அரசுப் பள்ளி மாணவர்களின் மருத்துவ படிப்பு எட்டாக்கனியாகி இருப்பதை, புள்ளி விபரத்தோடு விவரித்திருக்கும் இயக்குநர் எஸ்.பி.சுப்புராமன், வசனங்கள் மூலம் நீட் தேர்வை அமல்படுத்திய அரசாங்கத்தை சம்மட்டியால் அடிக்கவும் செய்திருக்கிறார். இயக்குநருக்கு பாராட்டுகளும், வாழ்த்துகளும்.