’தண்டுபாளையம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’தண்டுபாளையம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி
’தண்டுபாளையம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

’தண்டுபாளையம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிகா சிவாஜி

சோனியா அகர்வால் மற்றும் வனிதா விஜயகுமார் தங்களது கூட்டத்துடன் காவல்துறை அதிகாரியான டைகர் வெங்கட் மற்றும் அவரது குடும்பத்தாரை கொடூரமாக கொலை செய்கிறார்கள். எதற்காக அவர்கள் இந்த கொலைகளை செய்தார்கள், அவர்களின் பின்னணி என்ன? என்பது தான் படத்தின் கதை.

சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு கர்நாடகம் மற்றும் ஆந்திர மாநிலங்களில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு குற்றங்களில் ஈடுபட்டு வந்த தண்டுபாளையம் கூட்டத்தினர், தற்போதும் தங்களது கைவரியை பல இடங்களில் காட்டி வருவதும், அவர்களிடம் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்காக மக்களை எச்சரிக்கும் வகையில் திரைக்கதை மற்றும் காட்சிகள் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தண்டுபாளையம் கூட்டத்தின் குற்ற செயல்களை மையப்படுத்திய படங்கள் கன்னடம் மற்றும் தெலுங்கில் ஏற்கனவே  வெளியாகியிருந்தாலும், முதல் நேரடி தமிழ்ப் படமான இதில், பழைய படங்களின் காட்சிகள் சில சேர்க்கப்பட்டிருந்தாலும்,  அவற்றுடன் தற்போதைய காட்சிகளை இயக்குநர் மிக நேர்த்தியாக இணைத்திருக்கிறார்.

வனிதா விஜயகுமார் மற்றும் சோனியா அகர்வால் இருவரும் சவாலான கதாபாத்திரத்தில் நேர்த்தியாக நடித்திருக்கிறார்கள். இது முதல் பாகம் என்பதால் அவர்களது அதிரடி காட்சிகள் அளவாக இடம் பெற்றிருந்தாலும், இரண்டாம் பாகத்தில் அவர்களின் கொடூரமான சம்பவங்கள் மிரட்டப்போவது உறுதி.

காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் டைகர் வெங்கட், பிர்லா போஸ் உள்ளிட்ட மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு பொருத்தமான தேர்வாக இருக்கிறார்கள்.

ஒளிப்பதிவாளர் பி.இளங்கோவன் மற்றும் இசையமைப்பாளர் ஜித்தன் கே.ரோஷன் கதைக்கு ஏற்ப பணியாற்றியிருக்கிறார்கள்.

எழுதி இயக்கியிருப்பதோடு, தயாரிக்கவும் செய்திருக்கும் டைகர் வெங்கட், தண்டுபாளையம் கூட்டத்தின் சொல்லப்படாத பல உண்மைகளை சொல்லும் முயற்சியில் ஈடுபட்டிருப்பதோடு, தண்டுபாளையம் கூட்டத்தினர், தற்போது பல இடங்களில் பல குற்ற செயல்களில் ஈடுபட்டு வருவதை தெளிவாக விவரித்திருக்கிறார். 

அதிர்ச்சியளிக்கும் வகையில் இயக்குநர் காட்சிகளை கையாண்டிருந்தாலும், மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் நல்ல நோக்கத்தில் இப்படத்தை இயக்கி, தயாரித்த டைகர் வெங்கட் அவர்களுக்கு சென்னை பத்திரிகாவின் பாராட்டுகளும், வாழ்த்துகளும்.