’அதோமுகம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’அதோமுகம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி
’அதோமுகம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’அதோமுகம்’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

 

நாயகன் எஸ்.பி.சித்தார்த் தனது காதல் மனைவி நாயகி சைதன்யா பிரதாப்புடன் ஊட்டில் வசிச்சிட்டு வர்றார்.

 

மனைவிக்கு சர்பிரைஸ் கொடுக்க அவங்களுடைய செல்போன்ல அவங்களுக்கே தெரியாம ஆப் ஒன்றை பொருத்துரார். அது மூலம் அவங்களுடைய நடவடிக்கைகளை பதிவு செஞ்சு அவங்களுக்கு பரிசளிக்க முடிவு செய்றார்.

 

ஆனா மனைவியின் நடவடிக்கை அவருக்கு பேரதிர்ச்சி தருது அதுக்கு பிறகு அதிர்ச்சிக்கு மேல் அதிர்ச்சு தருது.

 

கடைசியில் நினைத்து பார்க்க முடியாத பேராபத்தில் சிக்குகிறார். அதில் இருந்து மீண்டாரா இல்லையான்னு இண்டர்ஸ்டிங்காக சொல்றது தான் படத்தோட மீதி கதை.

 

நாயகனா நடிச்ச எஸ்.பிசித்தார்த் பல்வேறு உணர்வுகளையும் வெளிப்படுத்தும் அழுத்தமான கதாபாத்திரத்தில் நடிச்சு அசத்துறார்.

 

நாயகியா சைதன்யா பிரதாப் இடைவேளை வரை சித்த முகத்துடன் நடிச்சிருக்காங்க, கடைசியில அவங்க எடுக்கும் விஸ்வரூபம் எதிர்பார்க்கத ஒன்னா இருக்குது.

 

ஆனந்த் ராக், மேத்யூ வர்கீஸ், ஜே.எஸ்.கவி, பிபின்குமார், சரித்திரன் என மற்ற வேடங்களில் நடித்திருப்பவர்கள் கதாபாத்திரத்திற்கு ஏற்ப அளவா நடிச்சே பேர் வாங்கிறாங்க.

 

அருண்பாண்டியன் கடைசியில வந்தாலும், மனசுல நிக்கிற மாதிரி நடிச்சிருக்கார். 

 

ஒளிப்பதிவு செஞ்ச அருண் விஜயகுமார், மணிகண்டன் முரளி இசை ரெண்டு பேரில் உழைப்பும் படத்துக்கு பெரிய பிளஸ் பாயிண்ட்.

 

கிரைம் சஸ்பென்ஸ் திரில்லர் படமாக இயக்கிய டைரக்டர் சுனில் தேவுக்கு சென்னை பத்திரிக்காவின் பாராட்டுக்கள் வாழ்த்துக்கள்.