’சத்தமின்றி முத்தம் தா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’சத்தமின்றி முத்தம் தா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி
’சத்தமின்றி முத்தம் தா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’சத்தமின்றி முத்தம் தா’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

 

கையல ஆயுதத்தோட முகமுடியோட வர்ற ஒருத்தர், கொலைவெறியோட அந்த இளம் பெண்ணை துரத்துராரு. அதுக்கு பயந்து அந்த இளம் பெண் நடி தெருவிலே ஓடுறாங்க, அப்ப ஒரு கார் வந்து அந்த பெண் மீது மோதிவிடுகிறது. அந்த நேரம் ஒரு இளைஞன் வந்து அந்த இளம் பெண்ணை தன்னோட மனைவி என்று சொல்லி ஆஸ்பத்திரியிலே சேர்க்கிறான். சில நாட்கள்ல குனம் ஆகிறாங்க. இருந்தாலும் தலையில அடிபட்டதால் பழைய நினைவுகள் எல்லாம் மறந்துடுது. கணவன் அரவணைப்பில் நாட்கள் நகருது. 

 

இது ஒரு பக்கம்னா, இன்னொருத்தர் அந்த இளம் பெண் தன் மனைவி என்றும், மனைவியை காணவில்லைன்னு போலீஸில் புகார் கொடுக்குறாரு. இதனால் அந்த இளம் பெண்ணுடன் இருப்பவர் கணவன் இல்லை என்பது தெரிய வருது.

 

அப்படினா கணவனு கூட இருக்கிறது யார்?, அவனுடைய நோக்கம் என்ன?, கடந்த காலத்தில் நடந்தது என்ன? அவளை கொலை செய்ய முயற்சி செஞ்சது யார்? என்ற இண்டர்ஸ்டிங்கான கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது தான் படத்தின் மீதிக்கதை.

 

பணத்துக்காக கொலை செய்றதுதான் தொழில்னாலும், நல்லவங்க மேல கனிவு காட்டும் கதாபாத்திரத்தில் தான் ஸ்ரீகாந்த் நடிச்சிருக்கார்.

 

தான் கொலை செய்ய நினைக்கும் பெண் கார் விபத்தில் அடிபட உடனடியா ஆஸ்பத்திரியிலே சேர்க்கிறார் ஸ்ரீகாந்த். அதுமட்டுமில்லாமல் அவரை உடனிருந்து காப்பாற்றுகிறார். சண்டைக்காட்சியிலும், கொலை காட்சியிலும் ஆக்ரோஷமாக, அமர்க்களமாக நடிச்சிருக்காரு.

 

தான் யார்ன்னு தெரியாமலும், தன்னை சுத்தி என்ன நடக்குதுன்னு தெரியாமலும், தன்னோட கணவன் யாருன்னு தெரியாமலும் தவிப்பராக பிரியங்கா திம்மேஷ் நடிச்சிருக்காங்க. பயம், பதட்டம், கோபம், காதல் காட்சிகள்ல அவங்க நடிப்பு, பிரமிக்க தக்க அளவுல நடிச்சிருக்காங்க.

 

ரெண்டு பெண்களை தேர்ந்தெடுத்து, ஆசைக்கு ஒருத்தி, ஆஸ்திக்கு ஒருத்தின்னு வில்லனா நடிச்சிருக்கார் வியான். வில்லத்தனத்தை அற்புதமா வெளிப்படுத்தி நடிச்சிருக்கார்.

 

கவர்ச்சிக்குன்னே நடிச்சிருக்காங்க நிஹாரிகா. போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹரிஷ் பெராடி மிடுக்கா நடிச்சிருக்கார்.

 

காட்சிகளுக்கு ஏத்த மாதிரி இசையமைச்சிருக்கார் ஜூபின்.

 

ஒளிப்பதிவு செய்ஞ்ச யுவராஜ் கதைக்களத்துக்கேற்ப காட்சிகளை படமாக்கியிருக்கார். 

 

சஸ்பென்ஸ் திரில்லர் கதை தேர்ந்தெடுத்து இயக்கிய இயக்குனர் ராஜ் தேவுக்கு பாராட்டுக்குறியவர்.