’ஜோஷ்வா : இமை போல் காக்க’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’ஜோஷ்வா : இமை போல் காக்க’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி
’ஜோஷ்வா : இமை போல் காக்க’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

’ஜோஷ்வா : இமை போல் காக்க’ பட விமர்சனம் - விமர்சிப்பவர் சென்னை பத்திரிக்கா சிவாஜி

 

லண்டனில் வாழும் நாயகன் வருணும், அமெரிக்காவைச் சேர்ந்த நாயகி ராஹேவும் சென்னையில் சந்திக்கிறாங்க. ரெண்டு பேரும் காதலிக்க ஆரம்பிக்கிறாங்க. தான் யாருன்னு வருண் சொல்லும் போது, அவங்க பயந்துபோய் பிரிந்துட்றாங்க.

 

இதுக்கு நடுவிலே பிரிந்து போன காதலியின் உயிருக்கு சர்வதேச குறவாலி மூலம் ஆபத்து வருது. காதலியை காப்பாத்த இறங்கும் வருண் மீண்டும் காதலியுடன் சேர்ந்தாரா? இல்லையா?, காதலியை எதற்காக கொலை செய்ய முயற்சிக்கிறாங்க?, வருண் பற்றிய உண்மை என்ன? போன்ற கேள்விகளுக்கு சூப்பர் ஆக்‌ஷன்ல பதில் சொல்றது தான் படத்தோட மீதிக்கதை.

 

நாயகனாக நடிச்ச வருணின் உழைப்பு ஒவ்வொரு பிரேம்லையும் பளிச்சுனு தெரியுது. படம் ஆக்‌ஷன் காட்சியில ஆரம்பிக்குறதால படம் பார்க்க ஆர்வம் அதிகமாயிடுது. அது மட்டுமில்லாம வருண் சண்டைக்காட்சிகள்ல உயிரையும் பொருட்படுத்தாம ரிஸ்க் எடுத்து நடிச்சு படத்டையே தூக்கி நிறுத்தியிருக்கார். காதல் காட்சிகளிலும் விட்டு வைக்கலை, ஆக்‌ஷன் ஹீரோன்னு நிரூபிச்சிருக்கார்.

 

நாயகியா நடிச்ச ராஹேக்கு அழுத்தமான கதாபாத்திரம். காதல், ஆக்‌ஷன் செண்டிமெண்ட் என எல்லா காட்சிகளிலுமே கொடிகட்டி பறந்திருக்காங்க நடிக்க வச்ச கெளதம் மேனனுக்கு பாராட்டுகள்.

 

உள்ளூர் ரவுடியாக நடித்திருக்கும் கிருஷ்ணா கொஞ்சம் நேரம் வந்தாலும், வருணுக்கு இணையாக நடிச்சிருக்காரு.

 

நாயகியின் தந்தையாக நடிச்ச கிட்டி, இறுதிக்காட்சியில் வந்தாலும் அனுபவமிக்க நடிப்பால் படத்துக்கு பலம் சேர்த்திருக்கார்.

 

மன்சூர் அலிகான், விசித்ரா ஒரு காட்சியில் நடித்தாலும் மனசுல நிக்கிற மாதிரி நடிச்சிருக்காங்க.

 

சண்டை காட்சிகளில் இப்படியும் மிரட்ட முடியுமான்னு நினைக்கிற அளவுக்கு ஸ்டண்ட் இயக்குனர் யானிக் பென் அசத்தியிருக்கார்.

 

இசையமைச்ச கார்த்திக் பாடல்கள் திரும்ப திரும்ப கேட்கிற மாதிரி இசையமைச்சிருக்காய். அதை விட பின்னணி இசை படத்துக்கே பலம் சேக்குது.

 

ஒளிப்பதிவாளர் எஸ்.ஆர்.கதிர் மற்றும் படத்தொகுப்பாளர் ஆண்டனி ஆகியோரது பணியும் குறிப்பிடத்தக்க வகையில் இருக்குது.

 

நாயகியை இமை போல் காக்கும் நாயகன், என்ற ஒருவரி கதை தான். அதை எந்த அளவுக்கு சுவாரஸ்யமா சொல்ல முடியுமோ அந்த அளவுக்கு சுவையா இயக்கிய கெளதம் வாசுதேவ் மேனனுக்கு சென்னை பத்திரிக்காவின் பாராட்டுகள், வாழ்த்துகள்.