20th Century Studios வழங்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது
உலகமே எதிர்பார்த்து காண துடித்துக்கொண்டிருக்கும், இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்பு மற்றும் லோகோ இறுதியாக வெளியாகியுள்ளது.
20th Century Studios வழங்கும் 'அவதார்: தி வே ஆஃப் வாட்டர்' திரைப்படம் 16 டிசம்பர், 2022 இந்தியாவில் வெளியாகிறது
அவதார் இரண்டாம் பாக திரைப்படம் டிசம்பர் 16 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. “அவதார்” படத்தின் தொடர்ச்சியான இப்படத்தின் தலைப்பு “அவதார்: தி வே ஆஃப் வாட்டர்”. முதல் படமான “அவதார்” படத்தின் சம்பவங்களுக்கு பிறகு, ஒரு தசாப்தத்திற்கும் மேலான காலகட்டத்தை கடந்து , சல்லி குடும்பம் (ஜேக், நெய்திரி மற்றும் அவர்களது குழந்தைகள்), அவர்களைப் பின்தொடரும் பிரச்சனைகள், ஒருவரையொருவர் பாதுகாப்பாக வைத்திருக்க, அவர்கள் செல்லும் தூரம், அவர்கள் உயிருடன் இருக்க போரிடும் போர்கள் மற்றும் அவர்கள் அடையும் துயரங்கள் அதைகடந்த அவர்களின் வெற்றி தான் இப்படத்தின் கதைக்களமாக அமைக்கப்பட்டுள்ளது . ஜேம்ஸ் கேமரூன் இயக்கி, கேமரூன் மற்றும் ஜான் லாண்டாவ் தயாரித்த இப்படத்தில் ஜோ சல்டானா, சாம் வொர்திங்டன், சிகோர்னி வீவர், ஸ்டீபன் லாங், கிளிஃப் கர்டிஸ், ஜோயல் டேவிட் மூர், CCH பவுண்டர், எடி ஃபால்கோ, ஜெமைன் கிளெமென்ட், ஜியோவானி ரிபிசி மற்றும் கேட் வின்ஸ்லெட் ஆகியோர் நடித்துள்ளனர். பார்வையாளர்களின் ஆர்வத்தை தூண்டும் வகையில், ஸ்டுடியோ "அவதார்" முதல் பாக திரைப்படத்தை செப்டம்பர் 23 அன்று திரையரங்குகளில் மீண்டும் வெளியிடுகிறது.