3D தொழில்நுட்பத்தில் உருவாகும் "தில்லுக்கு துட்டு 3"

3D தொழில்நுட்பத்தில் உருவாகும் "தில்லுக்கு துட்டு 3"

நடிகர் சந்தானம் தில்லுக்கு துட்டு 1, தில்லுக்கு துட்டு 2 ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்தார், இந்த இரு படங்களும் வியாபார ரீதியாக வெற்றியடைந்தது.

இந்நிலையில், 18 ரீல்ஸ் என்ற நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல டாக்டரும், முன்னணி திரைப்பட வினியோகிஸ்தருமான எஸ்.பி சௌத்ரி "தில்லுக்கு துட்டு 3" திரைப்படத்தை பெரும் பொருட்செலவில் 3D தொழில்நுட்பத்தில் உருவாக்க திட்டமிட்டுள்ளனர், இது குறித்து நடிகர் சந்தானத்திடம் பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது.