தேவர் மகன் படத்தில் மீனாவுக்கு பதில் ரேவதி நடித்தது எப்படி?
கமல்ஹாசனின் மிகப்பெரிய வெற்றி படைப்பான தேவர் மகன் படத்தில் அவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர் மீனா.இவரை வைத்து சில நாட்கள் படப்பிடிப்பும் நடந்தது.அந்த நிலையில்,மீனா மாற்றப்பட்டு அந்த கதாபாத்திரத்துக்கு ரேவதி ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பட்டார்.அதற்கு காரணம் என்று அந்தப்படத்தின் உதவி டைரக்டராக பணி புரிந்த ராசி அழகப்பன் வெளியிட்டார்.தேவர் மகன் இரண்டாம் பாகம் "தலைவன் இருக்கின்றான்" என்ற பெயரில் தயாராவதாக பேசப்படுகிறது.அந்த சமயத்தில் சில சுவாரஸ்யமான தகவல்கள் வெளிவந்தன.அதில் கதாநாயகியாக மீனா தான் நடித்தவர் அவரை வைத்து சில காட்சிகள் படமாக்கப்பட்டன.திடீரென்று படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.தேவர் மகன் திரைக்கதை மீண்டும் புதிய வடிவம் பெற்றது.அப்போது மீனா நிறைய தெலுங்கு படங்களில் நடித்துக் கொண்டிருந்தார் அதனால் தேவர் மகன் படத்தில் தொடர்ந்து நடிக்க முடியவில்லை.
அவருக்கு பதில் ரேவதியிடம் கேட்டபோது ஒப்புக் கொண்டார்.இப்படித்தான் ரேவதி தேவர் மகன் படத்துக்குள் வந்தார்.இவ்வாறு ராசி அழகப்பன் கூறினார்.