நியூஸ்7'தமிழ் தொலைக்காட்சியில் சட்டம் சார்ந்த வழிகாட்டும் நிகழ்ச்சி “மாண்புமிகு நீதியரசர்கள்”

நியூஸ்7'தமிழ் தொலைக்காட்சியில் சட்டம் சார்ந்த வழிகாட்டும் நிகழ்ச்சி “மாண்புமிகு நீதியரசர்கள்”

நம் நாட்டில் சட்டம் பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் குறைவாகவே இருக்கிறது. ஒரு பிரச்சினை வந்தால் சட்டப்படி அதை எப்படி எதிர் கொள்வது என்பது தெரியாமல் இருக்கிறார்கள். அதற்கு வழிகாட்டும் ஒரு நிகழ்ச்சியாக இருப்பதுதான் 'மாண்புமிகு நீதியரசர்கள்'. இந்நிகழ்ச்சி  ஞாயிறு காலை 9:30 மணிக்கு  நியூஸ்7' தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிறது.

சட்டம் தெரியாததால் வரும் அச்சத்தையும் குழப்பத்தையும் போக்கும் நிகழ்ச்சியாக இது அமைந்துள்ளது. கொரோனா காலத்தில் EMI செலுத்தச் சொல்லும் வங்கிகள், வாடகை கேட்கும் கட்டத்தின் உரிமையாளர்கள் , சம்பளம் கொடுக்க மறுக்கும் நிறுவனங்கள், வேலையிழக்கும் ஊழியர்களின் உரிமைகள் என பல பிரச்சனைகள் குறித்து சட்டத்தின் பார்வையில் அலசுகிறது மாண்புமிகு நீதியரசர்கள் நிகழ்ச்சி.

இந்தக் கேள்விகளுக்கு ஒரு வழக்கை எடுத்துக் கொண்டு மூத்த வழக்கறிஞர்கள் மீனாட்சி சுந்தரம், நீலவேணி ஆகியோர விளக்க, நெறியாளர் இரா.கோபாலகிருஷ்ணன் சட்டம் சார்ந்த கேள்விகளை முன்வைக்கிறார் , பா.கார்த்திக்கேசவன் இந்நிகழ்ச்சியை தயாரிக்கிறார்.