தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் திரு கடம்பூர் ராஜுவை சந்தித்தனர்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் அமைச்சர் திரு கடம்பூர் ராஜுவை சந்தித்தனர்

தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் திரு, கடம்பூர் ராஜு அவர்களை, தலைவர் திரு, ஜாகுவார் தங்கம் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், பொதுகுழு உறுப்பினர்கள் P. ரங்கநாயக்கலு, பா.ரஞ்சித்குமார், M.C. சேகர், J.மணிமாறன், T. நாகலிங்கம், T. சதாசிவமூர்த்தி, P. தயாநந்தன் ஆகியோர் சந்தித்து திரைப்படங்களுக்கு படப்பிடிப்பு நடத்த அனுமதி கோரியும், மேலும் சிறு படங்களுக்கான மானியம் கொடுக்க புளூரே டிஸ்க், ஹார்ட் டிஸ்க், கட்டணம் செலுத்தும் கால அவகாச தேதியை நீட்டித்து அறிவிக்கவும், மேலும் மானியத்தொகையை உடனடியாக வழங்கி சிறுபட தயாரிப்பாளர்களின் வாழ்வாதாரத்திற்கு உதவிட கோரியும் மனு அளிக்கப்பட்டது.