தளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் !!

தளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் !!
தளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் !!
தளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் !!
தளபதி விஜய் வழியில் அவரது ரசிகர்கள் !!

கொரோனா ஊரடங்கு நேரத்தில் பல சினிமா பிரபலங்கள்  "கிரீன் இந்தியா" சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு அந்தப் புகைப்படங்களை தங்களது  சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

இந்த நிலையில் நடிகர் மகேஷ் பாபு, 3 தினங்களுக்கு முன் தனது பிறந்த நாளை முன்னிட்டு இந்த சேலஞ்சில் மரக்கன்றுகளை நட்டு புகைப்படங்களை  தன் ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார் .மேலும் இந்த சவாலை தளபதி விஜய் , ஜூனியர் என். டி. ஆர், மற்றும் ஸ்ருதிஹாசன் ஆகியோரையும் செய்யுமாறு தன் டிவிட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார் .

தளபதி விஜய் நேற்று அவரது வீட்டு தோட்டத்தில் செடி நட்டு அந்த புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அதில் " மகேஷ் பாபு இது உங்களுக்காக. பசுமையான இந்தியா உருவாக்குவோம். அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் " என ட்வீட் செய்துள்ளார். இதற்கு ரிப்ளை செய்த மகேஷ் பாபு " சவாலை ஏற்று செய்ததற்கு மிகவும்  நன்றி விஜய் ப்ரோ ! பத்திரமாக இருங்கள் " என கூறியுள்ளார். அனைத்து முன்னணி நடிகர்கள் மற்றும் நடிகைகளும் தளபதி விஜய் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து வந்தனர் .

இந்நிலையில் "தலைவன் எவ்வழியோ ரசிகர்களும் அவ்வழியே " என்பதற்கேற்ப அனைத்து மாவட்ட விஜய் மக்கள் இயக்க மாவட்ட நிர்வாகிகள் மற்றும் ரசிகர்கள் அனைவரும் மரக்கன்றுகள் மற்றும் செடிகளை நட்டு வைத்து அந்த புகைப்படங்களை சமுக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்கள் . மேலும் இந்த கொரோன ஊரடங்கு காலத்தில் தளபதி விஜய் மக்கள் இயக்கம் தங்களால் இயன்ற உதவிகளையும் , நற்பணிகளும் செய்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது .