சமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த "திமிரு" நடிகர்

சமூக ஆர்வலருக்கு பாலியல் தொல்லை கொடுத்த "திமிரு" நடிகர்

பிரபல மலையாள நடிகர் விநாயகன், விஷால் கதாநாயகனாக நடித்த  ‘திமிரு’ படத்தில் வில்லனாக நடித்து இருந்தார். 

இந்த நிலையில் கேரளாவை சேர்ந்த சமூக ஆர்வலர் மிருதுளா தேவிக்கு விநாயகன் செக்ஸ் தொல்லை கொடுத்ததாக சர்ச்சையில் சிக்கி உள்ளார். இதுகுறித்து மிருதுளா தேவி கூறும்போது, “நிகழ்ச்சியொன்றில் கலந்து கொள்வதற்காக விநாயகனை செல்போனில் அழைத்தேன். அப்போது ஆபாசமாக பேசி பாலியல் தொல்லை கொடுத்தார். என்னை மட்டுமின்றி எனது தாயும் அவர் ஆசைக்கு இணங்க வேண்டும் என்று பாலியல் ரீதியாக வற்புறுத்தினார். இதற்கான ஆதாரம் என்னிடம் உள்ளது” என்றார்.

இதுகுறித்து கல்பட்டா போலீசிலும் விநாயகன் மீது புகார் அளித்தார். இந்த புகாரில் விநாயகன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மிருதுளா, விநாயகன் ஆகியோரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். விநாயகன் பாலியல் பேச்சை மிருதுளா செல்போனில் பதிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அந்த செல்போன் ஆதாரத்தையும் போலீசார் ஆய்வு செய்தார்கள். இதனால் விநாயகன் கைது செய்யப்படலாம் என்று கூறப்படுகிறது. முன் ஜாமீன் பெறும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார்.