விஷால் - மிஷ்கின் கூட்டணியில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பம்.

விஷால் - மிஷ்கின் கூட்டணியில் 'துப்பறிவாளன் 2' படப்பிடிப்பு லண்டனில் ஆரம்பம்.

துப்பறியும் கதை என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்புவர். அந்த வகையில், விஷால் நடித்து மிஷ்கின் இயக்கத்தில் ஆக்ஷன் திரில்லராக 2017-ம் ஆண்டு வெளியான 'துப்பறிவாளன்' திரைப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படத்தில் விஷாலுடன் பிரசன்னா, வினய், அனு இம்மானுவேல், ஆண்ட்ரியா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

விஷால் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்திற்கு அரோல் கரோலி இசையமைத்திருந்தார்.

தற்போது, 'துப்பறிவாளன்' படத்தின் இரண்டாம் பாகம் 'துப்பறிவாளன் 2' உருவாகவுள்ளது. இப்படத்தையும் மிஷ்கினே இயக்குகிறார். இளையராஜா இசையமைக்கிறார். கலை இயக்குநராக கிரவுன் ஃபோர்ட் பணியாற்றுகிறார்.

விஷால் நாயகனாக நடிக்க, புதுமுகம் ஆஷ்யா ( ASHYA ) , நாசர், ரஹ்மான், பிரசன்னா, கவுதமி, சுரேஷ் சக்ரவர்த்தி ஆகியோர் உடன் நடிக்கிறார்கள்.

விஷால் ஃபிலிம் ஃபாக்டரி நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு நாளை (04.11.2019) லண்டனில் துவங்குகிறது. முதல் கட்ட படப்பிடிப்பு 40 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறுகிறது.