யோகிபாபுவிற்கு ஜோடியாக நிச்சயம் நடிப்பேன்: நடிகை ரேகா

யோகிபாபுவிற்கு ஜோடியாக நிச்சயம் நடிப்பேன்: நடிகை ரேகா

`கடலோரக் கவிதைகள்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ரேகா இவர், தற்போது வெளியாகவிருக்கும் "தர்மபிரபு" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் அவர் கூறியதாவது:

"இத்தனை ஆண்டுகளுக்கு பிறகு ராதாரவியுடன் இணைந்து நடித்திருப்பது இதுவே முதல் முறை. இயக்குநர் அம்மா கதாபாத்திரத்திரம் இருக்கிறது பணியாற்றுகிறீர்களா? என்று கேட்டார். யோகிபாபுவிற்கு அம்மா என்றதும் ஒப்புக்கொண்டேன். நானே விரும்பி கேட்ட கதாபாத்திரம் இது. அவருடன் நடித்தால் நகைச்சுவை நன்றாக இருக்கும். எனக்கு மிகப்பெரிய வாய்ப்பாக இருக்கும் என்று நம்பினேன். இப்படத்தின் டிரெய்லரை பார்த்து என் கதாபாத்திரத்தைப் பற்றி அனைவரும் பேசுகிறார்கள். யோகிபாபுவிற்கு ஜோடியாக நிச்சயம் நடிப்பேன் என்றார்"