From The Desk - "Dream Warrior Pictures"

From The Desk - "Dream Warrior Pictures"

தமிழ்நாடு அரசு அறிவித்த 2016-2022 ஆண்டுகளுக்கான தமிழ்நாடு மாநில திரைப்பட விருதுகள் மூலம் எங்கள் தயாரிப்பு நிறுவனத்தின் படைப்புகளை கௌரவித்து, தமிழ் திரைப்படத் துறையின் சிறப்பை, தொடர்ந்து அங்கீகரித்து வருவதற்காக எங்களின் இதயபூர்வமான நன்றியும் மனமார்ந்த பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

விருது பெறும் நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களின் அர்ப்பணிப்பிற்கும் படைப்பாற்றலுக்கும் எங்களின் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். பின்வரும் விருதுகள் ஒவ்வொரு திரைப்படத்தின் பின்னாலும் உள்ள கூட்டுப் முயற்சிக்கான சான்றாக திகழ்கின்றன.

2016  - அருவி
• பெண்களை பற்றி உயர்வாக சித்தரிக்கும் படம் (சிறப்பு பரிசு) - அருவி
• சிறந்த நடிகை (சிறப்பு பரிசு) - அதிதி பாலன்

2016  -  ஜோக்கர்
• சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - குரு சோமசுந்தரம்
• சிறந்த உரையாடல் ஆசிரியர் - ராஜு முருகன்
2016  - காஷ்மோரா
• சிறந்த நகைச்சுவை நடிகை - மதுமிதா
• சிறந்த சண்டை பயிற்சியாளர் – அன்பறிவ்
சிறந்த குழந்தை நட்சத்திரம்- பேபி ஸ்மிருதி
• சிறந்த பின்னணி குரல் - தீபா வெங்கட்
2017 - தீரன் அதிகாரம் ஒன்று
• சிறந்த நடிகர் - கார்த்தி
• சிறந்த குணச்சித்திர நடிகர்- போஸ் வெங்கட்
• சிறந்த கதை ஆசிரியர் - எச். வினோத்
• சிறந்த பாடல் ஆசிரியர் - விவேக்
• சிறந்த சண்டை பயிற்சியாளர் - திலீப் சுப்பராயன்

2019  - கைதி
• சிறந்த நடிகர் (சிறப்பு பரிசு) - கார்த்தி
• சிறந்த வில்லன் நடிகர் - அர்ஜுன் தாஸ்
• சிறந்த சண்டை பயிற்சியாளர் – அன்பறிவ்

2019 - NGK
• சிறந்த பாடலாசிரியர் - கபிலன்

2021 - சுல்தான்
• சிறந்த தையற் கலைஞர்- பல்லவி சிங்

 
அருவி, ஜோக்கர், காஷ்மோரா, தீரன் அதிகாரம் ஒன்று, கைதி, என்.ஜி.கே, சுல்தான் ஆகிய திரைப்படங்களின் படக்குழுவினருக்கு எங்களின் மனமார்ந்த பாராட்டுகளையும் நன்றிகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.
மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு அரசு, விருதுகள் தேர்வுக் குழு, மற்றும் தமிழ்த் திரையுலகை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்

 
நன்றியுடன்,


S.R.பிரகாஷ் பாபு,
S.R.பிரபு
தயாரிப்பாளர்கள்,

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ்