From The Desk - "Potential Studios"

From The Desk - "Potential Studios"

தமிழ்த் திரையுலகில் சிறந்த படைப்புகளை ஊக்குவித்து, நடிகர்-நடிகையர்கள் மற்றும் நுட்பக் கலைஞர்களின் உழைப்பை அங்கீகரிக்கும் வகையில் ‛தமிழ்நாடு மாநில திரைப்பட விருது’களை வழங்கிய தமிழ்நாடு அரசுக்கு எங்களின் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறோம்.

பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் (Potential Studios) சார்பில் உருவான திரைப்படங்களுக்காக விருதுகள் பெற்ற அனைத்து நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்களுக்கும் எங்களின் உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். விருது பெற்ற ஒவ்வொரு திரைப்படத்திற்கும் பின்னால் பலநூறு கலைஞர்களின் கூட்டு முயற்சி இருப்பதையும் இந்த நேரத்தில் நன்றியோடு நினைவு கூறுகிறோம்.

2016 – மாநகரம்
* சிறந்த படம் – முதல் பரிசு
* சிறந்த இயக்குனர் – லோகேஷ் கனகராஜ்
* சிறந்த தையற் கலைஞர் – பி. செல்வம்

2019 – மான்ஸ்டர்
* சிறந்த நகைச்சுவை நடிகர் – கருணாகரன்

2022 – டாணாக்காரன்
* சிறந்த திரைப்படம் – இரண்டாம் பரிசு
* சிறந்த நடிகர் – விக்ரம் பிரபு
* சிறந்த குணச்சித்திர நடிகர் – போஸ் வெங்கட்

மாநகரம், மான்ஸ்டர், மற்றும் டாணாக்காரன் ஆகிய திரைப்படங்களுக்காக விருது பெற்றவர்கள் மற்றும் படத்தில் பங்காற்றிய நடிகர்-நடிகையர்கள் மற்றும் தொழில்நுட்பக் குழுவினர் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த பாராட்டுகள். மீண்டும் ஒருமுறை, தமிழ்நாடு அரசு, விருதுகள் தேர்வுக் குழு, மற்றும் தமிழ்த் திரையுலகை தொடர்ந்து ஆதரித்து வரும் அனைவருக்கும் எங்களின் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.


நன்றியுடன்,

S.R.பிரகாஷ் பாபு, S.R.பிரபு,  P.கோபிநாத், R.தங்க பிரபாகரன்
தயாரிப்பாளர்கள், பொட்டென்சியல் ஸ்டுடியோஸ் நிறுவனம்