“தர்பார்” Stills

“தர்பார்”  Stills
“தர்பார்”  Stills
“தர்பார்”  Stills

இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ்  இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள படம்  “தர்பார்” .  2.0 எனும் பிரமாண்ட படத்தின் வெற்றிக்கு பின் ரஜினிகாந்துடன் இரண்டாவது முறையாக இணைந்து இப்படத்தினை லைக்கா புரொடக்சன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது.

இந்த படத்தில் கதாநாயகியாக லேடி சூப்பர்ஸ்டார்  நயன்தாரா நடிக்கிறார் . பிரபல பாலிவுட் நடிகர் சுனில்ஷெட்டி வில்லனாகவும் , முக்கிய கதாபாத்திரங்களில் நிவேதா தாமஸ் , யோகிபாபு , தம்பி ராமய்யா , ஸ்ரீமன் , பிரதிக் பாபர் , ஜட்டின் ஷர்னா  , நவாப் ஷா , தலிப் தஹில் மற்றும் பலர் நடிக்கிறார்கள் .

அனிரூத் இசையில் இப்படத்திலிருந்து சும்மா கிழி எனும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. மீதமுள்ள பாடல்களுக்கும் ரசிகர்களுக்கிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது .

ஸ்ரீகர் பிரசாத்   படத்தொகுப்பு  செய்ய  சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார் . கலை இயக்கம் T சந்தானம் , சண்டை பயிற்சி பீட்டர் ஹெயின்/ராம் - லக்ஷமன் . நடனம் பிருந்தா ,ஷோபி .

" தர்பார் "வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக  திரைக்கு வருகிறது .

எழுத்து /இயக்கம் - AR முருகதாஸ்
தயாரிப்பு - சுபாஷ்கரன் -லைக்கா புரொடக்சன்ஸ்
இசை - அனிரூத்
படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்
ஒளிப்பதிவு - சந்தோஷ் சிவன்
கலை இயக்கம்-  T சந்தானம்
பாடல்கள் - விவேக்
 நடனம்-  பிருந்தா , ஷோபி
நிர்வாக தயாரிப்பு - சுந்தர்ராஜ்
மக்கள் தொடர்பு - டைமண்ட் பாபு -  ரியாஸ் கே அஹ்மத்