பட அதிபர் சங்க தேர்தல் இரண்டாவது முறையாக தள்ளி வைப்பு

பட அதிபர் சங்க தேர்தல் இரண்டாவது முறையாக தள்ளி வைப்பு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு தேர்தல் நடத்தி புதிய நிர்வாகிகளை தேர்வு செய்ய ஏற்பாடுகள் நடந்தன.ஏற்கனேவே மே10ந் தேதி தேர்தல் நடத்த முடிவு செய்தனர் பின்னர் ஜூன் 21ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். இதற்கான வேட்பு மனுக்கள் வருகிற 11ந்தேதி முதல் 14ந்தேதி வரை சங்க அலுவலகத்தில் வழங்கப்படும். மே 15ந்தேதி முதல் 19தேதி வரை வேட்பு மனுக்களை சங்க அலுவலகத்தில் சேர்த்து விட வேண்டும் என்றும் தனி அதிகாரி அறிவித்து இருந்தார்.

ஆனால் கொரோனா ஊரடங்கை வருகிற 17ந்தேதி வரை நீட்டித்து இருப்பதால் தேர்தல் பணிகளைத் தொடங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.கோர்ட்டிலும் வழக்கு உள்ளது இதையடுத்து தேர்தலை குறிப்பிட்ட தேதியில் நடத்த இயலாத நிலை உள்ளது. புதிய அட்டவணை பின்பு அறிவிக்கப்படும் என்று தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.

இந்த தேர்தலில் டி.சிவா ,தேனாண்டாள் முரளி ஆகியோர் தலைவர் பதவிக்கு போட்டியிடவதாக அறிவித்து உள்ளனர்.பாரதிராஜா எஸ்.தாணு சத்யஜோதி தியாகராஜன் உள்ளிட்ட மேலும் சிலரும் தலைவர் பதவிக்கு போட்டியிட இருப்பதாக அடிபடுகிறது.