கூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்

கூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்
கூட்டதில் ஒளிபவன், அனுதாப அலைக்காக நடிப்பவன்: கவினை விமர்சிக்கும் தர்ஷன்

பிக்பாஸ் நிகழ்ச்சி இறுதிகட்டத்தை நெருங்கி வரும் நிலையில் 7 போட்டியாளர்களும் ஒருவருக்கொருவர் முண்டியடித்து டைட்டிலை வென்றிட தீவிரமாக முயற்சித்து வருகின்றனர். குறிப்பாக இந்த வார டாஸ்க்குகளில் வெற்றி பெறுபவர் நேரடியாக இறுதிப்போட்டிக்கு செல்வார் என்பதால் இந்த வார டாஸ்குகள் அனைத்திஹ்லும் வெற்றி பெற தீவிர முயற்சி செய்து வருகின்றனர் 

அந்த வகையில் இன்று ஒரு வித்தியாசமான டாஸ்க் கொடுக்கப்படுகிறது. போட்டியாளர்களின் குணநலன்கள் குறித்து விமர்சனம் செய்யும் வகையில் அமைந்துள்ள இந்த டாஸ்க்கில் முதலில் தர்ஷன், சில குணநலன்கள் யாருக்கு பொருந்தும் என்பதை கூறுகின்றார். அதில் ‘சுயசிந்தனையும் தனித்தன்மையும் இல்லாமல் கூட்டத்தில் ஒளிந்து வாழ்பவர்கள் என்ற பிரிவுக்கு கவினை தேர்வு செய்கிறார் தர்ஷன். அதேபோல் மக்களின் அனுதாப அலைக்காக நடிக்கும் பரிதாபங்கள் என்ற பிரிவிற்காக கவின் மட்டும் சேரனை தேர்வு செய்கிறார் தர்ஷன்

இதற்கு சேரன் ’இந்த பிரிவுக்கு தன்னை தேர்வு செய்ததற்காக விளக்கம் கேட்கலாமா? என்று கேட்க அதற்கு தர்ஷன் விளக்கம் தர மறுப்பு தெரிவித்துள்ளார். மொத்தத்தில் இந்த டாஸ்க் பிற போட்டியாளர்களை பற்றி ஒவ்வொருவரும் தன் மனதில் உள்ளதை வெளிப்படுத்தும் வகையில் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால் இந்த டாஸ்கின் முடிவு சுவாரஸ்யமாக இருக்கும் என கருதப்படுகிறது