மாகாபா ஆனந்த் நடிப்பில் வெளியாகி இருக்கும் Black Bird ஆல்பம்

வித்யாசமாகவும் காமெடியாகவும் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருபவர் மாகாபா ஆனந்த். இவருக்கு தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவர் திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

பன்முக திறமைக் கொண்ட மாகாபா ஆனந்த், தற்போது Black Bird என்னும் ஆல்பத்தில் நடித்துள்ளார். சாதாரண மனிதனை கருப்பு காகா ஒன்று துரத்துவது போல் பாடல் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் தற்போது சூழ்நிலைக்கு ஏற்றவாறு படமாக்கி இருக்கிறார்கள். இதில் மாகாபா ஆனந்த்துடன் பிரீத்தி நடித்துள்ளார்.

இந்த ஆல்பத்திற்கு பாடல் வரிகள் எழுதி விக்னேஷ் கார்த்திகேயன் இயக்கி இருக்கிறார். அரவிந்த் கிருஷ்ணன் இசையில் விஜய் கிருஷ்ணா பாடி இருக்கிறார். சிவசாரதி ஒளிப்பதிவு செய்ய, தீபன் குமார் படத்தொகுப்பு கவனிக்க ஜே.எப்.எல் புரொடக்ஷன் நிறுவனம் தயாரித்துள்ளது. தற்போது இந்த ஆல்பம் ரசிகர்களை கவர்ந்து சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.