விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காவ்யா தாபர்'

விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் 'காவ்யா தாபர்'

T.D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கம் புதிய படத்தில் விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக நடிக்கும் ' காவ்யா தாபர்'!!

பிரசாந்த் நடித்த  ஜாம்பவான் , அர்ஜுன் நடித்த  வல்லக்கோட்டை , சசிகுமார் - நிக்கிகல்ரானி நடிப்பில் வெளியாக இருக்கும் ராஜ வம்சம் ஆகிய படங்களின் தயாரிப்பை தொடர்ந்து தற்போது மெட்ரோ பட இயக்குனர் ஆனந்த கிருஷ்ணன் இயக்கும் புதிய பெயரிடப்படாத படத்தை T .D ராஜா தயாரிக்கிறார் .

அரசியல் கலந்த த்ரில்லர் படமான இப்படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்கிறார் . இந்த படத்தில் இவருக்கு ஜோடியாக ' மார்க்கெட் ராஜா MBBS" படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான காவ்யா தாபர் கதாநாயகியாக  நடிக்கிறார். இவர் சினிமாவில்  ' ஈ மாயா ப்ரேமிட்டோ '  எனும் தெலுங்கு படத்தில் சினிமாவில் அறிமுகமாகினார். திரைத்துறைக்கு வரும் முன்னர் இவர் ஒரு மாடல் ஆக வலம் வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தெகிடி படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான நிவாஸ் கே பிரசன்னா இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறர். இணை தயாரிப்பு - ராஜா சஞ்சய் .

தொழிநுட்பக்குழு:

இயக்கம் - ஆனந்த கிருஷ்ணன் ,
தயாரிப்பு - T D ராஜா,
இணைத்தயாரிப்பு - ராஜா சஞ்சய்,
இசை - நிவாஸ் கே பிரசன்னா ,
ஒளிப்பதிவு - N S உதயகுமார்,
மக்கள்தொடர்பு - ரியாஸ் கே அஹமது.